சீரியல் நடிகர் விராத் - நவீனா திருமணம் குறித்தும், தனது தாய் குறித்தும் நவீனா மகள் உருக்கமாக பேசி உள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலம் பிரபலமானவர் விராத். இவர் கடந்த 18-ம் தேதி நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா பியூட்டிஷியனாக இருக்கிறார். பல பரபலங்களுக்கும் இவர் மேக்கப் போட்டு வருகிறார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இவருக்கு 15 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்.
இந்த நிலையில் விராத், நவீனா மற்றும் அவரின் மகள் கவின்யா ஆகியோர் பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்தனர். அதில் பேசிய கவீனா “ என் அம்மா ரொம்ப நாள் கழித்து சந்தோஷமா இருக்காங்க.. இதே போல் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும். என் அப்பா (விராத்) என் பெயரை டாட்டூ போடுவாருன்னு எதிர்பார்க்கல. எனக்கு ஒரு நல்ல அப்பாவாகவும், என் அம்மாவுக்கு ஒரு நல்ல கணவராக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறேன்..” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “ இப்போதைக்கு அவரை டாடி என்று கூப்பிடுகிறேன்.. போக போக நான் கம்ஃபர்டபிளாக உணர்ந்தால் நான் அப்பா என்று கூப்பிடுவேன். இனி விராத் தான் என் அப்பா, அவர் அம்மாவை நல்லா பாத்துக்கணும். ஆரம்பத்தில் இருந்து பல பிரச்சனைகள் இருந்தாலும், இப்ப நல்ல விஷயங்கள் நடப்பது சந்தோஷமா இருக்கும்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நவீனா “ நானும் விராத்தும் ஒரே மாதிரியான கேரக்டர். ஒரு மாதிரியாக யோசிப்போம். என்னை பார்த்தால் அவரை பார்க்க தேவையில்லை. விராத் என்னிடம் காட்டிய அன்பு போல் வேறு யாரிடம் என்னிடம் இந்தளவு அன்பு காட்டியதில்லை. எனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என் வாழ்க்கையை என் சரியாக வாழவில்லை. எனக்கு இப்போ அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிறைய அன்பு, காதலுடன் அந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று எனக்கு ஆசை.” என்று தெரிவித்தார்.
இதே போல் மற்றொரு வீடியோவில் பேசிய விராத் “ நவீனா என் வாழ்க்கை துணையாக வருவதற்கு நான் புண்ணியம் பண்ணிருக்கேன். காசு, பணம் எல்லாவற்றையும் விட ஒரு மனிதனுக்கு நிம்மதி தான் தேவை. அதை எனக்கு நவீனாவிடம் இருந்து கிடைக்கிறது. அவங்க நிறைய கஷ்டங்களை அனுபவிச்சுருக்காங்க.. ஆனால் இனி வாழ்க்கை முழுவதும் அவங்கள மகிழ்ச்சியாக பாத்துப்பேன். இனி வாழ்க்கை முழுவதும் அவங்கள பத்திரமாக பாதுகாப்பேன்” என்று கூறினார்.