விஜய்யும் இல்ல... பிரபாஸும் இல்ல! 3100 கோடி சொத்துக்கு அதிபதி; இந்தியாவின் பணக்கார வாரிசு நடிகர் யார் தெரியுமா
3100 கோடி சொத்துக்களுடன் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்தியாவின் பணக்கார வாரிசு நடிகர் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
நெப்போடிசம் என்பது சினிமாவில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. தமிழ் திரையுலகில் இது பெரியளவில் பேசு பொருளாக இல்லாவிட்டாலும், இந்தியில் நெப்போடிசத்தின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. அதுவே தெலுங்கு சினிமா நெப்போடிசத்தின் உச்சம் என்றே சொல்லலாம். அங்கு குறிப்பிட்ட சில குடும்பத்தின் பிடியில் தான் ஒட்டு மொத்த திரையுலகமே இயங்கி வருகிறது. வாரிசு நடிகர், நடிகைகளை பொறுத்தவரை அவர்களுக்கு வாய்ப்பு என்பது ஈஸியாக கிடைத்துவிடும், ஆனால் திறமை இருந்தால் மட்டுமே அவர்களால் உச்சத்தை தொட முடியும்.
அதற்கு உதாரணமாக நடிகர் விஜய், சூர்யா போன்ற நடிகர்களை சொல்லலாம். ஆரம்ப காலகட்டத்தில் அவர்கள் இருவரும் எதிர்கொள்ளாத விமர்சனங்களே இல்லை. ஆனால் இன்று அதையெல்லாம் தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவின் அடையாளமாக இருவரும் திகழ்ந்து வருகின்றனர். அவர்களைப் போலவே வாரிசு நடிகர் ஒருவர் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி இன்று 3100 கோடி சொத்துக்களுடன் பணக்கார வாரிசு நடிகராக வலம் வருகிறார். அவரைப் பற்றி பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... Keerthy Suresh : வாவ்... செம்ம அழகு! ஜொலிக்கும் சேலையில் கீர்த்தி சுரேஷ் நடத்திய ஜோரான போட்டோஷூட்
அந்த நடிகர் வேறுயாருமில்லை, பாலிவுட் ஹீரோ ஹிருத்திக் ரோஷன் தான். இவரது தந்தை ராகேஷ் ரோஷன் பாலிவுட்டில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்தவர் ஆவார். தந்தையின் தயவால் சினிமாவுக்குள் ஈஸியாக நுழைந்த ஹிருத்திக் ரோஷன், பல்வேறு வெற்றி, தோல்விகளை கண்டு இன்று பாலிவுட்டின் முன்னணி மாஸ் நடிகராக உருவெடுத்து உள்ளார். அவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.
அவரின் சொத்து மதிப்பு 3100 கோடி, மற்ற வாரிசு நடிகர்களை விட அவர் இந்த அளவுக்கு சம்பாதித்தற்கு முக்கிய காரணம் அவரின் பிசினஸ் தான். அவர் HRX எனும் ஸ்போர்ட்ஸ் ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். 7300 கோடி மதிப்பிலான அந்த நிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார் ஹிருத்திக் ரோஷன். அவரின் கைவசம் தற்போது வார் 2 திரைப்படம் உள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ரீ ரிலீசாகும் படத்திற்கு வரும் கூட்டம் கூட வாக்களிக்க வருவதில்லை; இயக்குநர் ஹரி வருத்தம்