அடேய்.. என்னடா இது, புருஷனை இப்படியெல்லாம் கூப்பிடுவீங்க? தமிழா தமிழாவில் இந்த வாரம் வேற லெவல் சம்பவம் தான்!

Published : Apr 18, 2024, 09:21 PM IST
அடேய்.. என்னடா இது, புருஷனை இப்படியெல்லாம் கூப்பிடுவீங்க? தமிழா தமிழாவில் இந்த வாரம் வேற லெவல் சம்பவம் தான்!

சுருக்கம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தமிழா தமிழா. கரு பழனியப்பனுக்கு அடுத்தபடியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் ஆவுடையப்பன்.   

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான டாபிக்கை கையில் எடுக்கும் நிகழ்ச்சி குழு தொடர்ந்து மக்களை கவர்ந்து வருகிறது. கடந்த வாரம் மனைவிகள் புருஷனை சரியாக வளர்க்கவில்லை என்று மாமியார் மீது குற்றசாட்டுகளுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த வாரம் கணவனே கண் கண்ட தெய்வம் என இருக்கும் ஜோடிகளும் மனைவி சொல்லே மந்திரம் என இருக்கும் ஜோடிகளும் பங்கேற்க உள்ளனர். 

இந்த நிலையில் இது குறித்து வெளியான ப்ரோமோ வீடியோவில் ஒரு நபர் நீ டீ நல்லா தானே போடுற நீயே போடு என ஆரம்பித்து அப்படியே சாம்பார், ரைஸ்னு அவங்க சொல்லுவாங்க நான் செய்வாங்க என்று சொல்கிறார், இதையெல்லாம் அவங்க தானே கத்துக்கணும் என்று ஆவுடையப்பன் கேட்க கத்துக்கிட்டாங்க எப்படி ஹஸ்பண்டை வேலை வாங்குறதுனு நல்லா கத்துக்கிட்டாங்க என்று சொல்கிறார். 

அடுத்து புருஷனை எப்படி கூப்பிடுவீங்க என்று கேள்வி கேட்க எருமமாடு, தடிமாடு என பெண்கள் கணவர்களை கூப்பிடும் பெயர்களை அடுக்கி கொண்டே செல்ல ஒரு பெண் அர்த்தம் தெரியாது ஆனால் வாயில வறதெல்லாம் கூப்பிடுவேன் என்று சொல்கிறார். அதிலும் லேட்டஸ்ட்டா கூப்பிடுறது இது தான் என ஒன்றை சொல்ல ஆவுடையப்பன் அய்யய்யோ என வாயடைத்து போகிறார். 

இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் அப்போ இந்த வாரம் தமிழா தமிழா வேற லெவல் பன்னா இருக்கும் போலயே என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bigg Boss : ஷமாவின் கேப்டன் பதவி பறிபோகிறதா? பிக் பாஸ் டெமாகிரசி ரூமில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் நாக் அவுட் டாஸ்க்... ஆனந்தி உடன் அடிதடியில் இறங்கிய லட்சுமி பிரியாவால் பரபரப்பு