CWC சீசன் 5 : நடுவராக வரும் அளவிற்கு அவரிடம் திறமை இருக்கா? மாதம்பட்டி ரங்கராஜ் லேசுப்பட்ட ஆளில்லை தெரியுமா?

By Ansgar R  |  First Published Apr 27, 2024, 11:22 AM IST

Madhampatty Rangaraj : பிரபலங்கள் வீட்டில் ஒரு விஷேஷம் என்றாலே அதில் நிச்சயம் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் சமையல் தான் ஊரே மணக்கும். அந்த அளவிற்கு ஒரு செலிபிரிட்டி செஃப் என்ற நிலைக்கு 
மாறியுள்ளார் ரங்கராஜ்.


இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒருவர் மிகவும் பிரபலமாக சமூக ஊடகங்கள் துணையாக நிற்கிறது, ஆனால் சமூக ஊடகங்கள் வழி உச்சத்தை தொடும் அனைவரும் உரிய திறமை உள்ளவர்களா? என்று கேட்டால் நிச்சயம் அது கேள்விக்குரிய ஒரு விஷயமே. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்து வரும் ஒருவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். 

இன்று ஒரு மிகப்பெரிய செலிபிரிட்டி வீட்டு விசேஷமாக இருந்தால் போதும், அதில் சமையல் நிச்சயம் மாதம்பட்டி ரங்கராஜாக தான் இருப்பார். அந்த அளவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரின் இல்ல விழாக்களுக்கு மிகச் சிறந்த முறையில் உணவு தயாரித்து தந்து வருகின்றார் அவர். இந்த சூழ்நிலையில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் அவர் நடுவராக களம் இறங்குகிறார். 

Latest Videos

undefined

Pan India : பிரபாஸின் கல்கி 2898 AD முதல்.. Jr. NTRன் தேவாரா வரை - Box Officeல் வேட்டை நடத்த வரும் மூவிஸ்!

மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமடைந்த மாதம்பட்டி ரங்கராஜ், ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை காட்டிலும், ஒரு சமையல் நிகழ்ச்சிக்கு நடுவராக வரும் அளவிற்கு திறமை உள்ளவரா? என்ற கேள்வி இணையத்தில் எழுந்து வருகிறது. 

சரி யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்? 

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மெஹந்தி சர்க்கஸ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக களம் இறங்கிய மாதம்பட்டி ரங்கராஜ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான "பென்குயின்" திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அட நடிகரா இவர், அப்போது நிச்சயம் பிரபலமானத்தில் தவறில்லை என்று நினைத்தால் அது தான் தவறு.. ரங்கராஜ் மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவர். இப்பொது 41 வயதாகும் அவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் பயணித்து வருகின்றார். 

சமையல் மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்த போதும் பெற்றோரின் வலியுறுத்தலின் காரணமாக பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றார். ஆனால் அதில் அவருக்கு பெரிய நாட்டம் இல்லாத நிலையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1999ம் தனது குடும்ப தொழிலை எடுத்து நடத்த தொடங்கினார். முதல் முதலில் பெங்களூருவில் தனது உணவகத்தை துவங்கியுள்ளார். 

பின் சிறு சிறு நிகழ்ச்சிகளில் சமைக்க தொடங்கி, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் உலகத்தில் பயணித்து இன்று மாபெரும் செலிபிரிட்டி குக் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி என்ற அவரது நிறுவனம் பல்வேறு நிகழ்வுகளில் சமைத்து அசத்தியுள்ளார். 

ஆகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த புதிய சீசனில் அவர் நடுவராக பங்கேற்க முழுமையான தகுதி பெற்றவர் என்றே கூறலாம். இது மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vikram 62 : ஆரமிக்கலாங்களா.. ரெடி ஜூட் சொன்ன சீயான் - விறுவிறுப்பாக துவங்கிய "வீர தீர சூரன்" - வைரல் வீடியோ!

click me!