- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கார்த்திக்கின் ஐடியாவை கேட்டு ஷாக்கான சந்திரகலா – ரோகிணி அண்ட் சாமுண்டீஸ்வரி சைலண்ட் – கார்த்திகை தீபம்!
கார்த்திக்கின் ஐடியாவை கேட்டு ஷாக்கான சந்திரகலா – ரோகிணி அண்ட் சாமுண்டீஸ்வரி சைலண்ட் – கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம் சீரியலில் ரோகிணி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்து சாமுண்டீஸ்வரி ஆத்திரமடைந்த நிலையில் கார்த்திக் கொடுத்த ஐடியாவால் சைலண்டாகியுள்ளார்.

Chandrakala shocked by Karthik idea
கார்த்திகை தீபம் சீரியல் இப்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒரு புறம் சந்திரகலாவால் அவமானப்படுத்தப்பட்ட மயில்வாகனம் ஹோட்டலில் சர்வர் வேலைக்கு சென்றார். அவரை தேடி சென்ற கார்த்திக், அவர் சர்வர் வேலை செய்வதை பார்த்து, அவருக்கு உதவி செய்வதாக கூறினார். ஆனால், மயில்வாகனம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு வங்கிக்கு அழைத்து சென்று ரூ.10 லட்சம் லோனுக்கு ஏற்பாடு செய்தார். இதன் மூலமாக இனி மயில்வாகனம் சொந்தமாக பிஸினஸ் செய்ய இருப்பதாக முடிவாகியுள்ளது.
Karthik master plan in Karthigai Deepam
அடுத்ததாக ரோகிணி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த சந்திரகலா, உடனடியாக தனது வீட்டிற்கு சென்று சாமுண்டீஸ்வரியை கையோடு கூட்டி வந்து உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். இதன் மூலமாக இத்தனை நாட்களாக பொக்கிஷமாக பொத்தி பொத்தி வைத்திருந்த ரகசியத்தை சாமுண்டீஸ்வரி தெரிந்து உள்ளார். அதன் பின்னர், வீட்டில் பூகம்பம் வெடித்தது.
கார்த்திக்கின் மாஸ்டர் பிளான்
ஆனால், ரோகிணியோ தனது தரப்பு நியாயத்தை வலியோடு பகிர்ந்து கொண்டார். அதில், திருமணம் நடந்து 4 வருடங்கள் ஆன நிலையில், இத்தனை வருடங்களுக்கு பிறகு இப்போது தான் குழந்தை உண்டாகியிருக்கிறது. ஆனால் அந்த குழந்தையால் உங்களது உயிருக்கு ஆபத்து என்று வரும் போது எப்படி நான் கர்ப்பமாக இருப்பதாக உங்களிடம் சொல்ல முடியும் என்று தனது தரப்பு நியாயத்தை வெளிப்படையாக சொன்னார்.
Karthigai Deepam Serial Today Episode
உண்மையில் கார்த்திக்கிற்கு புரிந்துவிட்டது. அதில், சந்திரகலா தான் ஏதோ ஒரு பிளான் பண்ணியிருக்கிறார். அதனால், நாம் ஒரு ஜோதிடரை அழைத்து வந்து இன்னொரு முறை ரோகிணியின் ஜாதகத்தை பார்க்கலாம் என்று ஐடியா கொடுத்தார். அதன்படி ராஜராஜன் ஜோதிடதை வர வழைக்க, அவரோ சிவனாண்டியின் பிளாக்மெயில் காரணமாக ரோகிணிக்கு குழந்தை பிறந்தால் சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஆபத்து என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.