Pan India : பிரபாஸின் கல்கி 2898 AD முதல்.. Jr. NTRன் தேவாரா வரை - Box Officeல் வேட்டை நடத்த வரும் மூவிஸ்!

Pan Indian Movies : இந்த 2024 மற்றும் எதிர்வரும் 2025ம் ஆண்டு இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு மெகா ப்ராஜெக்ட் படங்கள் வெளியாகவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Devara to Game Changer Pan Indian movies releasing soon to hit box office hard ans

பிரபாஸின் Kalki 2898 AD : மிக பெரிய தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் படம் தான் கல்கி 2898 AD. எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் மூத்த நடிகர்கள் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல் ஹாசன், ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்து  வருகின்றனர். இந்த படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேஜா சஜ்ஜாவின் Mirai : "ஹனு மேன்" படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா தனது அடுத்த முயற்சியான "மிராய் - சூப்பர் யோதா" மூலம் பார்வையாளர்களை திகைக்க வைக்க வருகின்றார். தேஜாவின் குறிப்பிடத்தக்க நடிப்பைக் கொண்ட மற்றொரு த்ரில்லான சூப்பர் ஹீரோ கதைக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படம் எதிர்வரும் 2025ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Cheran : சேரன் மகளின் திருமணம்.. மனக்கசப்பை மறந்து வாழ்த்திய பார்த்திபன் - சேரன் கொடுத்த ரிப்ளை என்ன தெரியுமா?

அல்லு அர்ஜுனின் Pushpa 2 : "புஷ்பா" படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, "புஷ்பா 2" க்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அல்லு அர்ஜுன் மீண்டும் நடிக்கும் நிலையில், இன்னொரு அதிரடி நடிப்புக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அண்மையில் இப்படத்தின் கிலிம்ப்ஸ் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படம் வெளியாகவுள்ளது.

ராம் சரணின் Game Changer : அரசியல் களத்தை புரட்டிப்போடும் ஒரு மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகி வருகின்றது சங்கரின் "கேம் சேஞ்சர்". நடிப்பின் அடிப்படையில் ராம் சரணுக்கு ஒரு கேம் சேஞ்சராக இந்த படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படமும் Game Changer படமும் இவ்வாண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்டிஆர் ஜூனியரின் Devara : காலப் பின்னணியில் அமைக்கப்பட்ட, "தேவரா" மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படமாகும். இது நடிகராக ஜூனியரின் பன்முகத் திறனைக் காட்டுகிறது. காதல், வீரம், தியாகம் ஆகியவற்றின் இந்த காவியக் கதைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படமும் எதிர்வரும் 2025ம் ஆண்டு வெளியாகவுள்ளது.

Sakshi : விதவிதமான ஆடையில் சிக்கென்ற போஸ்.. ரசிகர்களை இம்சிக்கும் சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios