Asianet News TamilAsianet News Tamil

Cheran : சேரன் மகளின் திருமணம்.. மனக்கசப்பை மறந்து வாழ்த்திய பார்த்திபன் - சேரன் கொடுத்த ரிப்ளை என்ன தெரியுமா?

Director Cheran : சினிமாவில் இயக்குனராக களமிறங்கிய வெகு சில ஆண்டுகளில் தேசிய விருதுகளை குவித்த இரு மிக முக்கிய இயக்குனர்கள் தான் பார்த்திபன் மற்றும் சேரன்.

Director Parthiban Wished for director cheran daughter marriage see what he replied ans
Author
First Published Apr 27, 2024, 8:27 AM IST

தமிழ் சினிமாவில் இப்பொது ட்ரெண்டிங்கில் இல்லை என்றாலும் கூட, பார்த்திபன் மற்றும் சேரனின் படங்களுக்கு எப்போது மக்கள் மத்தியில் ஒரு தனி மவுசு உண்டு. ஆனால் இவர்கள் இருவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு ஒரு மிக பெரிய மனக்கசப்பு ஏற்பட்டது. மிக பெரிய திறமைசாலி என்றபோதும், சற்றும் யோசிக்காமல் ஒருவர் மனதை புண்படும்படி பேசிவிடுவார் சேரன் என்று பகிரங்கமாக ஒரு பேட்டியில் பேசியிருந்தார் இயக்குனர் பார்த்திபன். 

மனக்கசப்பு ஏற்பட காரணம் என்ன?

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சேரன், முதல் முறையாக கடந்த 1997 ஆம் ஆண்டு இயக்குனராக களமிறங்கினார். அப்பொழுது அவருடைய திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் பார்த்திபன். "பாரதி கண்ணம்மா" என்கின்ற அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 

Ninaithen Vanthaai: அஞ்சலியை பார்க்க ஓடிவந்த சுடர்.. அலேக்காக கடத்திய வேலு - நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

அதன் பிறகு கடந்த 2000வது ஆண்டு "வெற்றி கொடி கட்டு" என்கின்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார் இயக்குனர் சேரன். அந்த திரைப்படம் தான் பார்த்திபன் மற்றும் சேரன் இணைந்து பயணித்த கடைசி திரைப்படம். பொதுவாக பார்த்திபன் மற்றும் முரளியை வைத்து தான் அதிக திரைப்படங்களை சேரன் இயக்கியிருக்கிறார். 

"வெற்றி கொடி கட்டு" திரைப்படத்தில் பார்த்திபன் மற்றும் முரளி ஆகிய இருவரும் நடித்திருப்பார்கள். ஆனால் அந்த கதையின் ஓட்டம் மிகவும் சீரியசாக இருப்பதால் இடையில் கொஞ்சம் காமெடிக்காக வேறு ஒரு திரைப்படத்திற்காக, தானும் வடிவேலும் எழுதி வைத்திருந்த நகைச்சுவை காட்சிகளை அதில் சேர்த்துக்கொள்வதாக சேரனிடம் கூறியுள்ளார் பார்த்திபன். 

ஆனால் அப்படி செய்தால், எங்கு பார்த்திபனுக்கு பெயர் சென்று விடுமோ? என்று எண்ணி அதை சேரன் முதலில் மறுக்க, பின் வடிவேலுவும் பார்த்திபனும் இணைந்து பேசி அவரை ஒப்புகொள்ளவைத்ததாக பார்த்திபன் ஒரு இடத்தில் கூறியுள்ளார்? என்று சொல்லப்படுகிறது. படம் வெளியான பின்பு அந்த திரைப்படத்திற்காக சேரனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. 

அப்போது ஒரு பட விழாவில் பங்கேற்ற சேரன், நான் அண்மையில் ஒரு குப்பை படம் ஒன்றை பார்த்தேன், அது பார்த்திபன் படமாக இருக்குமோ? என்று எண்ணினேன் என்று சேரன் பேசியதாக கூறப்படுகிறது. இதில் மிகப்பெரிய மனக்கசப்பை இருவரும் சந்திக்க, சில வருடங்கள் கழித்து ஒரு பேட்டியில் பேசிய பார்த்திபன், சேரன் ஒரு மிகச் சிறந்த இயக்குனர் என்பதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் சற்றும் யோசிக்காமல் பிறருடைய மனங்களை நோகடிப்பதில் அவர் வல்லவர் என்று கூறியிருந்தார். 

சேரன் கொடுத்த பதில் 

இந்த மனக்கசப்பு பல வருடங்கள் நீடித்தது, ஆனால் சேரன் அதை மறுத்தார், எப்போது நான் ஒரு படத்தை குப்பை படம் என்று கூறினேன் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அது பார்த்திபன் படமாக இருக்காது. அவர் சிறந்த இயக்குனர் என்று பார்த்திபனை புகழ்ந்தார் சேரன்.

சேரன் மகளின் திருமணம்.

இயக்குனர் சேரனுக்கும், செல்வராணி என்பவருக்கும் திருமணம் நடந்த நிலையில் அந்த தம்பதிக்கு நிவேதா மற்றும் தாமினி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சுரேஷ் ஆதித்யா என்பவருடன் திருமணம் நடந்தது. சேரனின் குருநாதர் கே.எஸ். ரவிக்குமார் திருமணம நிகழ்வில் பங்கேற்று தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். 

திரைத்துறையை சேர்ந்த பலரும் நேரில் வந்து தங்கள் வாழ்த்துக்களை மணமக்களுக்கு தெரிவித்தனர்.
இந்நிலையில் மனக்கசப்பு பெரிய அளவில் இருந்தாலும், நேரில் வரமுடியாத நிலையில், சேரன் மகளின் திருமணத்திற்கு தனது வாழ்த்துக்கள் இயக்குனர் பார்த்திபன் தன் "எக்ஸ்" பக்கத்தின் மூலம் தெரிவித்திருந்தார். அதற்கு மகிழ்ச்சியும், நன்றியும் சார் என்று கூறி தனது நன்றியை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சேரன்.

மனக்கசப்புகள் ஏற்படுவது சகஜம் தான் என்றாலும், இந்த இரு இயக்குனர்களுக்கும் தமிழ் சினிமாவின் மகுடங்கள் என்பதை அவர்களின் படங்கள் காலம் கடந்தும் பேசும். 

பின்னணி இசையே இல்லாத தமிழ் படம் 'டிராக்டர்'! 14வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்கு தேர்வு!

Follow Us:
Download App:
  • android
  • ios