KPY Bala : சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் சமூக நலனில் ஆர்வம் கொண்ட மனிதராகவும் இருந்து வருகின்றார் நடிகர் பாலா. அவர் தனது வருங்கால மனைவி குறித்து பேசியுள்ளார்.
படிப்பில் மிகவும் கெட்டிக்கார மாணவனாக திகழ்ந்து வந்த பாலா, பிரபல நடிகர் அமுதவாணன் உதவியால் விஜய் டிவியில் அறிமுகமானார். தனது தனித்துவமான உடல் மொழியாலும், சட்டென அவர் அடிக்கும் கவுண்டர்களாலும், தமிழ் மக்கள் நெஞ்சில் நீங்காத ஒரு இடத்தை அவர் பிடித்திருக்கிறார். பாலா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அதில் சிரிப்பலைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
சமூக சேவை
தான் சிறுவயதில் இருந்த பொழுது, தன் குடும்பத்தின் ஏழ்மை நிலையை குறித்து ஏளனமாக பேசிய அனைவரது முன்பும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்கின்ற ஒரு வைராக்கியத்தை தாண்டி, தனது நடிப்பின் மூலம் தான் ஈட்டும் சிறு தொகையை கூட தனக்கென பெரிய அளவில் வைத்துக் கொள்ளாமல். அதை தன்னை வளர்த்து ஆளாக்கிய தமிழக மக்களுக்கு செலவிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறார் பாலா.
தமிழகத்தில் உள்ள பல குக் கிராமங்களுக்கு நடிகர் பாலா இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்திருக்கிறார். அண்மையில் நல்ல குடிநீர் கிடைக்காமல் பாடுபட்டு வந்த ஒரு கிராமத்தினருக்கு, தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அவருடைய சொந்த செலவில் அவர் கட்டிக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பல உதவிகள்
நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும், அண்மையில் பாலாவை சந்தித்த அவர், அவரோடு இணைந்து தற்பொழுது பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். வறுமையின் பிடியில் இருந்த சில தாய்மார்களுக்கு பாலாவும் ராகவா லாரன்ஸ் அவர்களும் இணைந்து ஆட்டோ வாங்கி கொடுத்தனர்.
இப்படி தன்னுடைய செலவுக்கு என்று சிறிதளவு பணத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, மற்ற அனைத்தையும் பொதுமக்களுக்கு செலவிட்டு வரும் பாலா அண்மையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்பொழுது அவரிடம் அவருக்கான வருங்கால மனைவி குறித்த எதிர்பார்ப்பு என்னவென்று கேட்கப்பட்டது.
அதற் பதில் அளித்த அவர் "என்னை திருமணம் செய்து கொள்ளும் பெண் எனக்கு காலை எழுந்து டீ, காபி எல்லாம் போட்டு தர வேண்டாம். என்னை புரிந்து கொண்டு அவர் செயல்பட்டாலே போதும். என்னை நம்பினால் போதும் அவருக்கு தேவையான அனைத்தையும் நான் செய்து விடுவேன். அவர் Trustஐ என் மேல் வைக்கட்டும், நான் அவருக்கு "ரெஸ்ட்டை" கொடுக்கிறேன் கலகலப்பாக பேசியுள்ளார்.