Winner Movie : அப்போ வின்னர் படம் உருவாக இது தான் காரணமா? டோலிவுட் உலகை வச்சு செஞ்ச சுந்தர் சி! Viral Video!

Ansgar R |  
Published : Apr 30, 2024, 11:08 AM IST
Winner Movie : அப்போ வின்னர் படம் உருவாக இது தான் காரணமா? டோலிவுட் உலகை வச்சு செஞ்ச சுந்தர் சி! Viral Video!

சுருக்கம்

Director Sundar C : பிரபல இயக்குனர் சுந்தர் சி, தெலுங்கு திரைப்படங்கள் குறித்த தனது அனுபவத்தை மிகவும் காமெடியாக கூறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குனர் சுந்தர் சி

ஈரோட்டில் பிறந்த பிரபல இயக்குனர் விநாயகர் சுந்தரவேல் எனும் சுந்தர் சி தமிழ் சினிமாவில் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் பயணித்து வருகிறார். அவருடைய இயக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "முறை மாமன்". தொடர்ச்சியாக தமிழ் திரை உலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கமர்சியல் கிங்காக வலம் வரும் இயக்குனர் அவர். 

இந்நிலையில் அவர் தனக்கும், தெலுங்கு சினிமா உலகத்திற்குமான ஒரு இணைப்பைப் பற்றி பேசி இருக்கிறார். ஒருமுறை தனக்கு தெலுங்கு சினிமாக்களை பார்க்க வாய்ப்பு கிடைத்ததாகவும், ஒரே நாளில் மூன்று திரைப்படங்களை பார்க்க அவர் சென்றதாகவும் கூறியிருக்கிறார். அப்பொழுது தான் இரண்டாவதாக பார்த்த படம் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் என்று அங்குள்ள ஒருவர் கூறியுள்ளார். 

ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை தட்டிதூக்க காத்திருக்கும் கில்லி... 10 நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

டோலிவுட் உலகை பங்கமாய் கலாய்த்த சுந்தர் சி

ஆனால் அன்றைய தினம் அவர் பார்த்த மூன்று படங்களும், தமிழில் தான் எடுத்த படங்களை அப்படியே காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளதை கண்டு வியப்படைந்துள்ளார். அப்போது தான் தெலுங்கு படங்களை காப்பியடித்து நாம் ஒரு படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்துள்ளது. அதன் பிறகு அவர் இயக்கி மெகாஹிட்டான படம் தான் வின்னர். 

பிரஷாந்த் மற்றும் சுந்தர் சி

நடிகர் பிரஷாந்த் மற்றும் சுந்தர் சி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் இது குறித்து பேசிய சுந்தர் சி. தெலுங்கு திரையுலகில் இருந்து தழுவி எடுத்த படம் தான் வின்னர். ஆனால் அதில் அப்படியே ஈ அடிச்சான் காபி போல இல்லாமல். நான் தெலுங்கு படத்தை தழுவி வின்னர் படம் எடுத்தேன். ஆனால் அதன் பிறகு வெளியான ஒரு தெலுங்கு படத்தில் வின்னர் படத்தில் வரும் ஆச்சு அசலான காட்சி ஒன்று காப்பியடித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு நான் அதிர்ந்துபோனேன். 

காப்பியடிப்பதில் எனக்கும், தெலுங்கு திரையுலகிற்கு நடந்த அந்த போட்டியில் இறுதியில் அவர்கள் தான் வென்றார்கள் என்று தன் தோல்வியை அவர் ஒப்புக்கொண்டார். 

கிளாமர் காட்டினது போதும்.. எப்போ நடிக்க போறீங்க? நெட்டிசன்களின் கேள்விக்கு மாளவிகா மோகனனின் நச் பதில்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!
ஸ்வீட் எடு கொண்டாடு: எலிமினேஷனில் இருந்து கிரேட் எஸ்கேப்: பாரு ஹேப்பி அண்ணாச்சி!