நடிகை ஜோதிகா, எவரெஸ்ட் சிகரத்திற்கு தன்னுடைய குழுவினருடன் ட்ரெக்கிங் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட அது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
நடிகை ஜோதிகா, கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு சென்று செட்டில் ஆன பிறகு தன்னுடைய லைப் ஸ்டைலை பாலிவுட் நடிகைகள் போல் மாற்றிக்கொண்டுள்ளார். தினமும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து படு ஃபிட்டாக மாறியது ஒருபுறம் இருக்க, இது குறித்த வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
மேலும் கோலிவுட் படங்களை விட, பாலிவுட் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுகிறார் ஜோ. சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளியான சைத்தான் திரைப்படம் வெளியாகி 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. நடிப்பை தாண்டி, ட்ரெக்கிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டும் ஜோதிகா இமயமலைக்கு ட்ரெக்கிங் மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட, இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஜோதிகா வெளியிட்டுள்ள வீடியோவில், எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி நடப்பது, அங்குள்ள ஒரு சிறிய அறையில் தங்கியிருப்பது, மின்சாரம் இல்லாத அந்த இடத்தில் சோலார் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து வாழ்வது, பனி மழையில் நனைவது, அங்குள்ள ஹோட்டல்களில் கிடைக்கும் உணவை சாப்பிடுவது போன்ற காட்சிகள் உள்ளன. குறிப்பாக ஜோ தன்னுடைய தோழியுடன் தான் இதை அனைத்தையும் செய்துள்ளார்.
undefined
இதற்க்கு முன் எந்த ஒரு நடிகையும், இப்படி எவரெஸ்ட் மலைக்கு ட்ரெக்கிங் செய்தது இல்லை... நீங்கள் நிஜத்திலும் ஒரு ஸ்ட்ராங் வுமன் என கூறி ரசிகர்கள்... ஜோதிகாவை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.