- Home
- Cinema
- இது செம்ம கூட்டணியா இருக்கே... வடிவேலு உடன் முதன்முறையாக இணையும் விஜய் சேதுபதி - அடடே இயக்கப்போவது இவரா..!
இது செம்ம கூட்டணியா இருக்கே... வடிவேலு உடன் முதன்முறையாக இணையும் விஜய் சேதுபதி - அடடே இயக்கப்போவது இவரா..!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விஜய் சேதுபதி, முதன்முறையாக நகைச்சுவை நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருகிறார். அங்கு இவர் தற்போது மெர்ரி கிறிஸ்துமஸ், ஜவான் மற்றும் காந்தி டாக்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ஜவான் படத்தை அட்லீ இயக்குகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுதவிர காந்தி டாக்ஸ் என்கிற மெளன படத்திலும் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்தை கிஷோர் பாண்டுரங் இயக்குகிறார்.
இதையும் படியுங்கள்... உழைப்பிற்கேற்ற ஊதியம் கொடுத்தால் போதும்...முன்னணி ஹீரோக்களை மறைமுகமாக தாக்கும் கார்த்தி
ஆறுமுககுமார் உடன் விஜய் சேதுபதி
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தமிழிலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். அப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து வடிவேலுவும் நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட இப்படத்தை ஆறுமுககுமார் இயக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்கிற படத்தை இயக்கியவர் ஆவார்.
இப்படத்தை ஆறுமுக குமாரே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாம். முதல்முறையாக வடிவேலுவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்க உள்ள படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. வடிவேலுவும் தற்போது மாமன்னன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... குடிபோதையில் கார் ஓட்டிய பிரபல தமிழ் பட இயக்குனர்... மடக்கிப் பிடித்து காரை பறிமுதல் செய்த போலீஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.