- Home
- Cinema
- குடிபோதையில் கார் ஓட்டிய பிரபல தமிழ் பட இயக்குனர்... மடக்கிப் பிடித்து காரை பறிமுதல் செய்த போலீஸ்
குடிபோதையில் கார் ஓட்டிய பிரபல தமிழ் பட இயக்குனர்... மடக்கிப் பிடித்து காரை பறிமுதல் செய்த போலீஸ்
தமிழில் குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண், குடி போதையில் கார் ஓட்டிச் சென்று போலீசிடம் சிக்கி உள்ளார்.

கத சொல்லப் போறோம் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் கல்யாண். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான குலேபகாவலி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் பேமஸ் ஆனார் கல்யாண். இப்படத்தில் பிரபுதேவா, ரேவதி, ஹன்சிகா ஆகியோர் நடித்திருந்தனர்.
இதையடுத்து நடிகை ஜோதிகாவை வைத்து ஜாக்பாட் என்கிற காமெடி படத்தை இயக்கிய கல்யாண், தற்போது காஜல் அகர்வால் நடித்த கோஷ்டி மற்றும் ஜல்சா ஆகிய இரண்டு படங்களை இயக்கி உள்ளார். இதில் கோஷ்டி படம் ஷூட்டிங் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... தளபதி தந்தைக்கு இந்த நிலையா? ஹரித்துவாரில் ரிக்ஷா ஓட்டிய எஸ். ஏ.சந்திரசேகர்! வைரலாகும் புகைப்படம்!
இந்த நிலையில், குடி போதையில் கார் ஓட்டிச் சென்று இயக்குனர் கல்யாண் போலீசிடம் சிக்கியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலை - சேமியர் சாலை சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக காரில் வந்த இயக்குனர் கல்யாணை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவர் குடி போதையில் கார் ஓட்டி வந்தது தெரியவந்ததை அடுத்து அவருக்கு அபராதம் விதித்த போலீசார், அவர்மீது வழக்குப்பதிவு செய்தது மட்டுமின்றி, அவர் வந்த காரையும் பறிமுதல் செய்து தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். இதையடுத்து வேறு ஒரு வாகனத்தில் அங்கிருந்து கிளம்பிச் சென்றார் இயக்குனர் கல்யாண்.
இதையும் படியுங்கள்... பிறந்தநாளில் அப்பாவாக போகும் தகவலை வெளியிட்ட விஜய் டிவி சூப்பர் சிங்கர் அஜய்! வைரலாகும் போட்டோஸ்..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.