தளபதி தந்தைக்கு இந்த நிலையா? ஹரித்துவாரில் ரிக்ஷா ஓட்டிய எஸ். ஏ.சந்திரசேகர்! வைரலாகும் புகைப்படம்!

தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தற்போது ஆன்மீக சுற்றுலாவாக, ஹரித்துவார் சென்றுள்ள நிலையில்... அங்கு ரிக்ஷா ஓட்டும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

Vijay father SA Chandrasekhar who drove a rickshaw in Haridwar viral photo

தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தமிழ் மொழி மட்டுமின்றி கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களையும் இயக்கி உள்ளார். நடிகர் விஜய் சினிமாவிற்குள் நுழைய இவரது தந்தையின் பங்கு மிகவும் முக்கியமானது. நடிகர் விஜயகாந்தை வைத்து மட்டும் இதுவரை 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான   சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன்,ஒன்ஸ் மோர், ரசிகன் போன்ற படங்கள் தற்போது வரை ரசிகியர்களால் விரும்பக்கூடிய படங்களாக இருந்து வருகிறது.

Vijay father SA Chandrasekhar who drove a rickshaw in Haridwar viral photo

மேலும் செய்திகள்: Sneha Photos: 40 வயதை கடந்தாலும் மங்காத அழகு..! கணவரை கட்டி பிடித்து... குடும்பத்துடன் குதூகலம் பண்ணும் சினேகா
 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் ஷங்கர், எம்.ராஜேஷ், பொன்ராம் போன்ற பலர் இவரிடம் உதவி இயக்குனர்களாக பஇருந்து, பின்னர் தமிழ் சினிமாவில் படம் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 80 வயதை எட்டிய போதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க கூடிய மனிதர். கடந்த சில வருடங்களாக இவர் திரைப்படங்களை இயக்கவில்லை என்றாலும், பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Vijay father SA Chandrasekhar who drove a rickshaw in Haridwar viral photo

மேலும் செய்திகள்: Anikha Surendran: குழந்தைத்தனம் மாறிய அனிகா..! கொசுவலை போன்ற உடையில் கால் அழகை காட்டிய ஹாட் போட்டோஸ்!
 

நேரம் கிடைக்கும் போதெல்லாம், தன்னுடைய மனைவி மற்றும்... துணை இயக்குனர்களுடன் வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று வரும் இவர், தற்போது... ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். இமயமலை, ஹரித்துவார்... போன்ற இடங்களை சுற்றி பார்ப்பது மட்டும் இன்றி, தன்னுடைய உதவி இயக்குனர்களை ரிக்ஷவில் வைத்து கொண்டு ட்ரிப் அடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்க்கு நெட்டிசன்கள் தளபதியின் தந்தைக்கு ரிக்ஷா ஓட்டும் நிலையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios