Varalaxmi: வரலட்சுமியின் வருங்கால கணவரின் தோற்றத்தை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்! பளார் பதிலடி கொடுத்த நடிகை!

First Published Apr 30, 2024, 1:51 PM IST

நடிகை வரலட்சுமியின் காதலரும், வருங்கால கணவருமான, நிகோலாய் தோற்றத்தை வைத்து சில ட்ரோல் செய்து வந்த நிலையில் இதற்க்கு பக்கா பதிலடி கொடுத்துள்ளார்.
 

Varalaxmi sarathkumar

தமிழ் திரையுலகில் சுப்ரீம் ஸ்டார் என பெயர் எடுத்தவர் நடிகர் சரத்குமார். இவரின் முதல் மனைவி சாயாவுக்கு பிறந்த மூத்த மகள் தான் வரலட்சுமி. இவர் கல்லூரியில் படிக்கும் போதே, காதல், பாய்ஸ் போன்ற படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை தந்தை சரத்குமார் நடிக்க வேண்டாம் என கூறியதால் ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் சிம்புவுக்கு ஜோடியாக 'போடா போடி' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
 

இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற போதிலும், வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. இதை தொடர்ந்து ஹீரோயினாக மட்டும் இன்றி வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து அழுத்தமான ரோல்களில் நடித்து வருகிறார். 

Ajith: கடைசி நேரத்தில் முட்டிக்கிச்சு! அஜித் நடிக்க வேண்டிய ஹிட் பட வாய்ப்பை தட்டி தூக்கிய நடிகர் பிரஷாந்த்.!
 

வரலட்சுமி, பிரபல நடிகர் விஷாலை சில வருடன் காதலித்த நிலையில், பின்னர் அவரிடம் இருந்து பிரேக் அப் செய்து பிரிந்தார். இதை தொடர்ந்து சமீபத்தில் தன்னுடைய 14 வருட நண்பர் நிகோலாய் சச்தேவ் என்கிற தொழிலதிபருடன் வரலட்சுமிக்கு  திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள ஹோட்டலில், மிகவும் எளிமையான முறையில் நடந்தது. இதில் வரலட்சுமிக்கு நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நிக்கோலாய் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.
 

நிக்கோலாய் ஏற்கனவே விவாகரத்தானவர் என்பதும் இவருக்கு 15 வயதில் மகள் ஒருவர் உள்ள தகவலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாத வரலட்சுமி, திருமண நிச்சயதார்த்தத்திற்கு  பின்னர், தன்னுடைய வருங்கால கணவருடன் டேட்டிங் செய்யும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

Jovika: நடிகையாகும் முன்பே கவர்ச்சியில் இறங்கிய வனிதா மகள்! குட்டை உடையில் சிங்கப்பூரில் சிறகடிக்கும் ஜோவிகா!
 

இப்படி இவர் வெளியிடும் புகைப்படங்கள் சில நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு ஆளாகிறது. அந்த வகையில், நிக்கோலாய் தோற்றத்தை சிலர் ட்ரோல் செய்து வந்த நிலையில் இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக வரலட்சுமி, தன்னுடைய காதலர் என் பார்வைக்கு மிகவும் அழகானவர் என கோரி பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!