Heat Wave:வெயிலில் இருந்து தப்பித்து குளிர்ந்த காற்று வாங்க ஆட்டோவில் புது செட்அப்-வியந்து பார்க்கும் பயணிகள்

May 20, 2024, 1:39 PM IST


வெயிலை சமாளிக்க புது ஐடியா

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் வசிக்கும் சையத் ஷான் 36வயதான இளைஞர் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பு ஆட்டோ ஸ்டாண்டில் கடந்த15 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.இந்தநிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் ஓட்டோவை பகல் நேரத்தில் ஓட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.  இதனையடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தவர், தனது ஆட்டோவில் பிவிசி பைப் ஒன்றை ஏர் கூலர் போல் அமைத்துள்ளார்

வெளியில் இருந்து வரும் காற்று பிவிசி பைப் மூலம் உள்ளே சென்று வெளியே வரும் போது கூலிங்காக மாறியுள்ளது. இதனால், புழுக்கம் இல்லாமல் ஆட்டோவை இயக்கி வந்துள்ளார். இருந்த போதும் ஒரு சில நேரங்களில் சூடான காற்று வந்ததால் பிவிசி வளைவு பைப்பில் தண்ணீரை ஊற்றியுள்ளார். இதனையடுத்து உள்ளே செல்லும் சூடான காற்று  குளிர்ச்சியான காற்றாக மாறி வருவதாக தெரிவித்துள்ள ஆட்டோ ஓட்டுநர் சையத் கான், இதற்காக ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்ததாக கூறியுள்ளார்.