நாட்டறம்பள்ளி.. காரின் டயர் வெடித்து விபத்து.. திமுக MLA மகள், 1 சிறுவன் உட்பட 5 பேருக்கு காயம் - வீடியோ!

நாட்டறம்பள்ளி.. காரின் டயர் வெடித்து விபத்து.. திமுக MLA மகள், 1 சிறுவன் உட்பட 5 பேருக்கு காயம் - வீடியோ!

Ansgar R |  
Published : May 19, 2024, 11:16 PM IST

Car Accident : காரின் டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார் பள்ளத்தில் விழுந்ததில் திமுக MLA மகள், மருமகன் உள்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் இவரது மனைவி அருணாதேவி, இவர் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜியின் மகள் ஆவார். இவர்கள் இருவரும் மருத்துவர்கள், தர்மபுரியில் ஒரு தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வரும்நிலையில், அருணா தேவியின் சகோதரரும், திருப்பத்தூர் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளரும் பிரபாகரன் மனைவிக்கு நேற்று வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது,

குழந்தையை பார்ப்பதற்காக அருணாதேவி அவரது கணவர் மோகன்ராஜ், இவர்களின் 10 வயது மகன் தர்ஷனேஷ், மோகன் ராஜின் தந்தை கண்ணன், தாயார் கிருஷ்ணவேணி ஆகிய 5 பேரும், காரில் தர்மபுரியிலிருந்து வேலூர் நோக்கி வந்துள்ளனர், அப்பொழுது அந்த கார் நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர்  டோல் கேட் அருகே பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லுக்குட்டை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென காரின் முன்பக்க வலது டயர் வெடித்துள்ளது.

இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் காயமடைந்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு படுகாயமடைந்த 5 பேரையும் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவ்விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

03:29வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:19தஞ்சையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்ற சுற்றலாப் பொங்கல் திருவிழா ! வைரல் வீடியோ
05:02சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் ! திமுக எம்.பி.கனிமொழி பேட்டி
02:15எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் திமுகவை வெல்ல முடியாது 2026ல் திமுக வெற்றி பெறப்போவது உறுதி
03:43தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது...! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
05:51மக்களுக்கு தெரியாமல் அரசு மதுபான கடை அரசுக்கு எச்சரிக்கை பொதுமக்கள் போராட்டம்
05:292026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றிபெறும் - வானதி சீனிவாசன் பேட்டி
04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
04:19ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்