அரண்மனை 4-க்கு போட்டியாக ரீ-ரிலீஸ் ஆகும் அஜித் படங்கள்... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் படங்களின் லிஸ்ட் இதோ

First Published Apr 30, 2024, 1:41 PM IST

ஏப்ரல் மாதம் முடிந்து மே மாதம் தொடங்க உள்ள நிலையில், மே முதல் வாரத்தில் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அரண்மனை 4 (Aranmanai 4)

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் அரண்மனை 4. இப்படத்தை குஷ்பு உடன் சேர்ந்து இயக்குனர் சுந்தர் சி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற மே 3-ந் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது.

குரங்கு பெடல் (Kurangu Pedel)

கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் குரங்கு பெடல். இதில் காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கோடை விடுமுறையினை குதூகலமாய் கொண்டாடிய கடைசி தலைமுறையின் உணர்வுக் குவியலாய் உருவாகி இருக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். இப்படம் மே 3-ந் தேதி திரைக்கு வருகிறது.

தி புரூஃப் (The Proof)

ராதிகா இயக்கத்தில் சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் தி புரூஃப். கோமதி சத்யா தயாரித்துள்ள இப்படத்திற்கு தீபக் இசையமைத்து உள்ளார். நடிகை ரித்விகாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற மே 3ந் தேதி அரண்மனை 4 படத்துக்கு போட்டியாக திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... KPY Bala : வயசு 30 ஆகப்போகுது.. எப்போ கல்யாணம்? வருங்கால மனைவி பற்றிய தன் எதிர்பார்ப்பு - மனம் திறந்த பாலா!

தீனா (Dheena)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் தீனா. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார். நடிகர் அஜித்தை மாஸ் ஹீரோவாக அப்கிரேடு பண்ணிய படங்களில் தீனாவுக்கு முக்கிய பங்கு உண்டு. இப்படம் வருகிற மே 1-ந் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாளன்று ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

பில்லா (Billa)

அஜித்தின் கெரியரில் மாஸ் ஹிட் அடித்த படம் தான் பில்லா. நடிகர் அஜித் கேங்ஸ்டராக நடித்த இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். ரீமேக் படமாக இருந்தாலும் செம்ம ஸ்டைலிஷான மேக்கிங்கால் ரசிகர்களை அசர வைத்த இப்படமும் வருகிற மே 1-ந் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாளன்று ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

ஓடிடி ரிலீஸ் படங்கள் (OTT release Movies on May 1st week)

விக்னேஷ் கார்த்திக் இயக்கிய ஹாட்ஸ்பாட் திரைப்படம் மே 3-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. அதேபோல் விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்திலும், ஜோதிகாவின் ஷைத்தான் திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் வருகிற மே 3-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. மலையாளத்தில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வருகிற மே 5-ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்...  Nayanthara : மெகா பட்ஜெட் படம்.. "அந்த" நடிகரின் வருகையால் படத்திலிருந்து விலகிய நயன்தாரா? லேட்டஸ்ட் அப்டேட்!

click me!