பயிர்களுக்கு ஜீவாமிர்தத்தை பயன்படுத்துவதால் அப்படியென்ன நன்மைகள் ஏற்படுகிறது?
பயிர்களுக்கு ஜீவாமிர்தத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
** ஜிவாமிர்தம் பாய்சசப்படும் பயிர்களை எந்த நோயும் தாக்காது.
** ஜிவாமிர்தம் நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்கள் வரவு அதிகரிக்கிறது .
** ஜிவாமிர்தம் அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது.
** ஜிவாமிர்தம் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது.
** ஜீவாமிர்தக் கரைசலுடன் மூலிகைப் பூச்சிவிரட்டி, அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரா ஆகியவற்றை கலந்து பயன்படுத்தலாமா?
** ஜீவாமிர்தம் என்பது மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்க உதவும் பொருள். அஸ்திரம் என்பது பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தப்படும் பொருள். எனவே எதிர்மறையான இரண்டு பொருட்களையும் ஒன்றாகக் கலக்கக் கூடாது. வேலை குறையட்டும் என்று எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்யாதீர்கள்.