கனமழை எச்சரிக்கை! கவனமாக போங்க! பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துறை திடீர் அலர்ட் மெசேஜ்!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் 'ஃபெங்கல்' காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
Fengal Cyclone
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. அந்த வகையில் தென்கிழக்கு வங்கக்கடல் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Rain
இதன் காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
Heavy Rain Alert
இந்நிலையில், புயல் உருவாகியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.
Tam ilnadu Government bus
அதில், சுரங்கப் பாதைகள் மற்றும் மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் மழை நீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தொலைதூர பேருந்துகளை காட்டாற்று ஓரங்களில் உள்ள சாலைகளில் கவனமாக இயக்க வேண்டும்.
SETC
பேருந்துகளில் மழைநீர் ஒழுகுவது, சாய்வு இருக்கைகள் சரிவர இயங்காதது போன்ற புகார்கள் வந்தால் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உடனடியாக கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து கிளை மேலாளர்களுக்கு எஸ்.இ.டி.சி. மேலாண் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.