ஸ்டைலிஷ் லுக்கில் ஒரு எலக்ட்ரிக் பைக்; ஆரம்ப விலை ரூ. 39,999 தான் - மாஸ் காட்டும் OLA!
OLA Bike : பிரபல ஓலா நிறுவனம் தனது இரு புதிய பட்ஜெட் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இரண்டுமே ஸ்டைலிஷ் லுக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் இப்பொது எலக்ட்ரிக் வாகனம் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால், புதிய மடல் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் பல எலக்ட்ரிக் பைக்குகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ள ஓலா நிறுவனம் இப்பொது. OLA Gig மற்றும் OLA Gig+ என்று இரு புதிய இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஓலா கிக், வணிக ரீதியிலான இரு சக்கர வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது வாகன ஓட்டிக்கான பெரிய ஒற்றை இருக்கை மற்றும் பின்புறத்தில் பெரிய கேரியருடன் வருகிறது.
இந்த புதிய OLA Gig ஸ்கூட்டர், இருபக்க டயர்களில் டிரம் பிரேக்குகளை தான் பயன்படுத்துகிறது. மற்றும் ஒரு சிறந்த டெலிஸ்கோபிக் முன் போர்க்கைக் கொண்டுள்ளது. ஓலா கிக் மாடல் ஒரு சிறிய 250-வாட் மோட்டாருடன் வருகிறது. மற்றும் 25 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறன்கொண்டது இது. 25 கிலோமீட்டர் வேகம் என்பதால் இந்த வண்டியை பதிவு செய்யாமல் பயன்படுத்த முடியும். இந்த தயாரிப்பு முக்கிய மெட்ரோ நகரங்களில் நாம் பார்க்கும் "யூலு" மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்றும் பெரிய அளவில் நம்பப்படுகிறது.
மிடில் கிளாஸ் மக்களுக்கு வரப்பிரசாதம்.. மைலேஜ் தரும் 7 சீட்டர் காரின் விலை 5.32 லட்சம்
அதே நேரம் Ola Gig+ பைக், மிகவும் சக்திவாய்ந்த 1.5kW மோட்டாருடன் வருகிறது மற்றும் மணிக்கு சுமார் 45kph வேகத்தில் இதனால் செல்லமுடியும். அதாவது சாலைப் பயன்பாட்டிற்கு இந்த OLA Gig + பைக்கை கட்டாயம் பதிவு செய்யவேண்டும். மேலும் இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் ஒரே நீக்கக்கூடிய 1.5kWh பேட்டரி பேக்குடன் வருகின்றன. நீங்கள் Gig+ ஐ வாங்கினால் இரண்டு பேக்குகளுக்கு அதை நீட்டிக்க முடியும். ஓலா கிக் 112 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்றும், ஓலா கிக்+க்கு 81 கிமீ அல்லது 157 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்றும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது (அதாவது நீங்கள் அதை ஒரு பேட்டரியுடன் வாங்குகிறீர்களா? அல்லது இரண்டு பேட்டரியுடன் வாங்குகிறீர்களா என்பதைப் பொறுத்து)
செயலி அடிப்படையிலான அணுகல் மூலம் இந்த ஸ்கூட்டர் இயங்கும். மேலும் ஓலா நிறுவனம் விரைவான சார்ஜிங் நேரங்களைக் கூறினாலும், அது குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் எதையும் கூறவில்லை. இதுவரை, ஓலா டிஜிட்டல் ரெண்டர் படங்களை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளது மற்றும் வேறு எந்த விவரக்குறிப்புகளும் இல்லை. இப்போதைக்கு, இருக்கை உயரம், கர்ப் எடை, சுமை சுமக்கும் திறன் மற்றும் சக்கர அளவுகள் போன்ற விவரங்கள் தெரியவில்லை.
எந்த நேரமும் ஈசியா பேட்டரிமாற்றலாம்! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெற லெவல்!