பருத்தியில் நோய்களை தடுப்பதற்காக தொடர்ச்சியாக தீங்கு விளவிக்கும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதினால் பூச்சிகள் அதிக எதிர்ப்ப திறன் பெற்று விடுவதினால் தொடர்ந்து அதிக முறை பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டியுள்ளது.

இவைகள் உற்பத்தி செலவுகளை அதிகப்படுத்துகிறது.அங்கக வேளாண்மை இந்த முறைக்கு எதிர் மாறானது.பருத்தியில் அங்கக வேளாண்மை முறையினை பின்பற்றுவதற்காக ஏராளமான பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் ஆதாரமாக உள்ளது.

பருத்தியில் அங்கக வேளாண்மைக்கான அனுகுமுறையில் இராசயன மருந்துகள் இல்லத ஒரு முறையான அங்கக வேளாண்மை பருத்தி உற்பத்தியில் முதன்மையான இடம் பெறுகிறது.


1.. இடத் தேர்வு

அங்கக வேளாண்மைக்கு கடுமையான மண்ணரிப்பினால் பாதிக்கப்பட்ட இடங்களும்,வருடம் முழுவதும் களைகள் நிறைந்துள்ள நிலங்களும் பயனளிக்காது.அங்கக வேளாண்மை என்பது நடைமுறையில் உள்ள சாகுபடி முறைகளை புறக்கணிப்பதோ அல்லத மாறுபட்டதோ அல்ல,எனவே வளம் குறைந்த மண்ணை நன்கு வளப்படுத்திய பிறகே அங்கக வேளாண்மையை கடைபிடிக்க முடியும்.

2. ரகத்தை தேர்வ செய்தல்

அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகங்கள் இராசயன உரஙக்களக்கே அதிக விளைச்சலை தரக்கூடியது அங்கக வேளாண்மைக்கு உகந்தது அல்ல,பாரம்பரியமான மற்றம் அங்கக வேளாண்மைக்க பொருத்தமான ரகங்களை தேர்வு செய்யவும்.நோய் எதிர்ப்புதிறன் மிக்க ரகங்கள் மிகவும் பொருத்தமான ஒன்றாகும். குறைவான வயதுடை ரகங்கள் ஓரளவிற்கு ஏற்புடையது மேலும் காய்புழு தாக்குதலும் பாதிப்பும் குறைவும்.

3. நடவு மற்றும் விதை அளவு

அமிலத்தில் நனைக்கப்பட்ட விதைகளை சர்வதேச விதிமுறைகளின்படி (1 FOAM) பயன்படுத்த கூடாது.அங்கக சாகுபடியில் உற்பத்தியில் செய்யப்பட்ட இழைக்காக சான்றிதழ் பெறமுடியாது.

இருப்பினும் அங்கக வேளாண்மையின் மூலம் சாகுபடி செலவுகளை குறைத்து இலாபத்தை அதிகரிக்க விவசாயிகள் அமில நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை உபயோகித்து விதையின் மூலமாக பரவக்கூடிய நோய்களை தவிர்த்து தரமான பயிர் வளர்ச்சியை பெறமுடியும். 

விதை நேர்த்தி செய்யப்பட்டாத விதைகளை பயன்படுத்தும் பொழுது சரியான பயிர் எண்ணிக்கையை பெற முடியும்,விதை நேர்த்தி செய்யப்படாத விதைகளை பயன்படுத்தும் பொழுது சரியான  பயிர் எண்ணிக்கையை பெற அதிக அளவிலான விதைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஒரு ஹெக்டரில் 75×15 செ.மீ இடைவெளியில் 25 கிலோ விதைகளை பயன்படுத்தும் பொழுது 85 லிருந்து 90 ஆயிரம் செடிகளை ஒரு ஹெக்டரில் பெற முடியும். இரண்டு வரிசை பருத்தி செடிகளின் நடுவே ஒரு வரிசை தீவனதட்டை பயிரினை நடவு செய்ய வேண்டும். இது பருத்தி செடி பூப்பதற்கு முன்பாக செய்யப்பட வேண்டும்.

4) உரமிடுதல்

சரியான உற்பத்தியை பெற, மண்வளத்தை பராமரிப்பதும் படிப்படியாக உயர்த்துவதும் அவசியம். பருத்தியில் அங்கக சாகுபடிக்கு மண்ணின் அங்கக சத்துக்களை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் மிகவும் முக்கியமானது. 

இவைகள் மண்ணின் பெளதிக தன்மையை அதிகிரிக்கிறது, மண்ணின் கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது மேலும் சத்துக்களை அளிப்பதையும் மேம்படுத்துகிறது. இதற்கு அதிக அளிவலான தொழுவுரங்களை இடுவதன் மூலம் பருத்தி பயிருக்கு தேவையான சத்துக்களை கிடைக்கச் செய்யலாம். 

பொதுவாக தொழுவுரங்களை இல்லாத பொழுது பல்வேறு வகையான உயிர் உரக் கலவைகளை உபயோகிக்கலாம். இயற்கை உரங்களான (தொழுஉரம், கலப்புஉரம், மண்புழுஉரம்) பசுந்தாள் உரங்கள், தானிய பயிர்கள் மற்றம் உயிர் உரங்கள் உடன் மண்வளத்தை திரும்ப பெற ஏதுவான பயிர் சுழற்சி முறைகள் ஆகியன மண்வளத்தை பராமரிக்கும் அங்கங்களாகும்.