பருத்தி சாகுபடியில் களை மேலாண்மை

அங்கக வேளாண்மையில் நிலத்தில் கோரை, அறுகம்புல், ஏறுலை போன்ற நிரந்தரமான களைகளை கட்டுப்படத்தாவிடில் அங்கக வேளாண் முறையில் கட்டுப்படுத்துவது கடினம். இருப்பினும் இத்தகைய களைகளின் வேர்கள், கிழங்குகள் போன்ற மண்ணுக்கு அடியுள்ளவற்றை கோடையில் உழவின் போது வெளிப்படுபவற்றை கையினால் அப்புறப்படுத்த வேண்டும். 

இதற்கு இயந்திரங்களைக் கொண்டோ அல்லது மனிதர்களைக் கொண்டோ களைகளை அப்புறப்படுத்தலாம். இந்த களைகளை மக்க வைப்பதன் மூலம் மறுசுழற்சி செய்து தொழுவுரமாக பயன்படுத்தமுடியும். 

ஆனால் இந்த களைகள் நிரந்தரமான களைகள் என்பதால் முழுவதுமாக மக்க வைத்தே பின்பே தொழுவுரமாக பயன்படுத்தப்பட வேண்டும். தட்டைப் பயிறினை இரண்டு வரிசை பருத்திச் செடிகளுக்கு நடுவே வளர்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்த முடியும்.

பருத்தி சாகுபடியில் சுழற்சி முறையினை தேர்ந்தெடுத்தல்

மண்வளத்தைப் பாதுகாக்கவும் மற்றும் நோய் தாக்குதல் மற்றும் களைகளை கட்டுப்படுத்தவும் பயிர்சுழற்சி முறை அவசியமானதாகும். 

அதிக சத்துக்களை எடுத்துக்கொள்கின்ற பயிர்களை தவிர்த்து அந்த பகுதிக்கு ஏற்ற பயிர்வகைப் பயிர்களை தவிர்த்து அந்த பகுதிக்கு ஏற்ற பயிர்வகைகளைப் பயன்படுத்தலாம்.