குகேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிரக்ஞானந்தா.! விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

நெதர்லாந்து விஜ்க் ஆன்ஸீ நகரில் நடந்த டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். டை பிரேக்கரில் குகேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிரக்ஞானந்தாவிற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Ajmal Khan  | Published: Feb 4, 2025, 12:33 PM IST

நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன்ஸீ நகரில் டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்களான குகேஷ், பிரக்ஞானந்தாஇடையே  டை பிரேக்கர் போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக ஆடிய பிரக்ஞானந்தா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதனையடுத்து சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த போட்டியில் நிறைய உலக செஸ் சாம்பியன்கள் நிறைய பேர் கலந்து கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் வென்றது மிகவும் பெருமையாக உள்ளது என கூறினார். மேலும் கடந்த ஆண்டு மத்தியில் சரியாக ஆடாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் முதல் இடம் பிடித்தது சந்தஷோஷமாக இருப்பதாக தெரிவித்தார். 

.

Video Top Stories