WATCH | ஒரு டூ-வீலரில் 5 பேர் ஆபத்தான பயணம்! சக வாகன ஓட்டிகள் பீதி!

வாணியம்பாடியில் ஒரே இரு சக்கர வாகனத்தில் 5 இளைஞர்கள் அதிவேகமாக செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 

First Published Jun 24, 2023, 4:00 PM IST | Last Updated Jun 24, 2023, 4:00 PM IST

ஒரு இரு சக்கர வாகனத்தில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். கட்டாயம் உயிர்காக்கும் தலைகவசம் அணிய வேண்டும் என காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காதர்பேட்டையில் இருந்து ஜின்னா பாலம் ரவுண்டானா செல்லும் முக்கிய பிரதான சாலையில் 18 வயதிற்குட்பட்ட 5 இளைஞர்கள் தலைகவசம் கூட அணியாமல் அதிவேகமாக ஒரே இரு சக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்று சாலைவிதிகளை மீறி இரு சக்கர வாகனங்களை இயக்கும் இளைஞர்களின் பெற்றோர்களை அழைத்து போலீசார் கண்டிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Read More...