ஸ்டைலிஷ் லுக்கில் தல; ரொமான்டிக்கில் தெறிக்கவிடும் Sawadeeka லிரிக்கல் பாடல் வெளியானது!
விடாமுயற்சி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள Sawadeeka என்கிற லிரிக்கல் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. தல அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்தில் திரிஷா நடித்துள்ளார். தற்போது இந்த படத்தில், அஜித் ஸ்டைலிஷ் லுக்கில் ரொமான்டிக் லுக்கில் தெறிக்கவிடும் Sawadeeka என்கிற லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மகிழ் திருமனேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.