எல்லார்க்குள்ளையும் ஒரு திருடன் இருக்கான்.! விஜய் சேதுபதி - ஷாஹித் கபூர் நடித்துள்ள ஃபர்சி' ட்ரைலர் வெளியானது!
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ள, க்ரைம் திரில்லர் வெப் சீரிஸானா 'ஃபர்சி' ட்ரைலர் வெளியாகி உள்ளது.
தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் வெற்றிக்கு பின்னர், இயக்கிய ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில் உருவாக்கியுள்ள புதிய வெப் சீரிஸ் 'ஃபர்சி'. இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ராஷி கண்ணா, கேகே மேனன், நடிகை ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இதன் ட்ரைலர் வெளியாகி உள்ளது. எட்டு எபிசோடுகளுடன் உருவாக்கிய இந்த தொடரில், நகைச்சுவை, ஆக்சன், த்ரில்லிங், என அனைத்தும் அம்சங்களும் உள்ளன. செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு பாடம் கற்பிக்க நினைக்கும், புத்திசாலித்தனமான தெருக்கலங்களை சுற்றி இந்த கதை நகர்கிறது. அவருக்கும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் இடையேயான ஒரு விறுவிறுப்பான போராட்டம் தான் ஃபர்சி.
பிப்ரவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த தொடரின் ட்ரைலர் வெளியாகி, தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.