தமிழ்நாட்டுக்கு முட்டை... எங்கள் வரிப்பணம் எங்கே? சென்னையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்!

எங்கள் வரிப்பணம் எங்கே என கேட்டு சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Union Budget 2024 Zero for tamilnadu where is our tax money banners in chennai smp

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி கூடிய கூட்டத்தொடர், வருகிற 9ஆம் தேதி (இன்று) நிறைவடையவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.” என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெருநாய்கள் தொல்லைக்கு தேசிய அளவிலான சிறப்பு குழு: நாடாளுமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்!

தொடர்ந்து, மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும், வெள்ள நிவாரணம் தராததை கண்டித்தும் நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு திமுக கூட்டணிக் கட்சி எம்.பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், எங்கள் வரிப்பணம் எங்கே என கேட்டு சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக் காட்டும் வகையில், முட்டை படம் இடம்பெற்றுள்ளது. மேலும், எங்கள் வரிப்பணம் எங்கே என்று கேட்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு அருகில், திரைப்படம் ஒன்றில் தன்னிடம் ஏதுவும் இல்லை என தனது ட்ரவுசர் பாக்கெட்டை வடிவேலு திறந்து காட்டும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, நிதி ஒதுக்கீடு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. கர்நாடகத்திற்கு அநீதி இழைத்துள்ளதாக மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கர்நாடக காங்கிரஸ் அரசு நேற்று முன் தினமும், நிதி பங்கீட்டில் அநீதி இழைப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அம்மாநில அமைச்சரவை நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டன என்பது கவனிக்கத்தக்கது.

இதனிடையே, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பாக, திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு புள்ளி விவரங்களோடு பதில் அளித்துள்ளது. அதில், மத்திய அரசுக்கு தமிழ்நாடு கொடுக்கும் 1 ரூபாய்க்கு, 26 பைசா மட்டுமே திருப்பி அளிக்கப்படுவதாகவும், அதுவே, பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்துக்கு 2.2 ரூபாய், மத்திய பிரதேசத்துக்கு 1.70 ரூபாய் திருப்பி அளிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

மீனவர் பிரச்சினை: கூட்டு நடவடிக்கைக் குழுவினை புதுப்பிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

அதேபோல், கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகள் (இறக்குமதி வரி மீதான ஜிஎஸ்டியைத் தவிர்த்து) ரூ.22,26,983.39 கோடி. அதே காலக்கட்டத்தில் உத்திரப் பிரதேசத்தில் வசூலிக்கப்பட்ட வரி ரூ.3,41,817.60 கோடியாகும்.

அதுவே, கடந்த 5 ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கிய வரிப் பகிர்வுத் தொகை ரூ.6,42,295.05 கோடி. அதுவே, கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டும் விடுவிக்கப்பட்ட வரிப் பகிர்வுத் தொகை சுமார் ரூ.6,91,375.12 லட்சம் கோடி எனவும் திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்வி மூலம் தெரியவந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios