தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும் நாவலாசிரியருமான பேராசிரியர் ராஜ் கௌதமன் இன்று (நவம்பர் 13) காலாமானர்.
தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும் நாவலாசிரியருமான பேராசிரியர் ராஜ் கௌதமன் இன்று (நவம்பர் 13) காலாமானர். 74 வயதான அவர் கடந்த சில காலமாக உடல்நலம் குன்றி இருந்ததுள்ளார்.
பண்பாட்டு ஆய்வுகளுக்காக அறியப்பட்ட ராஜ் கௌதமன், தலித்தியம், பின்நவீனத்துவம், பழந்தமிழ் இலக்கியம் தொடர்பில் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். சிலுவைராஜ் சரித்திரம், லண்டனில் சிலுவைராஜ், காலச்சுமை ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.
‘கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக’, 'ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்', 'ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்', 'க. அயோத்திதாசர் ஆய்வுகள்', 'பொய்+அபத்தம்= உண்மை', 'புதுமைப்பித்தன் என்னும் பிரம்மராக்ஷஸ்' போன்றவை இவரது முக்கியமான ஆய்வு நூல்கள்.
சார்லஸ் டார்வினின் 'The Origin of species' (உயிரினங்களின் தோற்றம்), எரிக் ஃப்ராமின் 'The Sane Society' (மனவளமான சமுதாயம்), 'The Art of Loving' (அன்பு எனும் கலை) முதலிய பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
விளக்கு விருது (2016), விஷ்ணுபுரம் இலக்கிய விருது (2018), வானம் இலக்கிய விருது (2022), கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனை விருது (2024) ஆகியவை ராஜ் கௌதமனுக்கு வழங்கப்பட்டுள்ளன.
RAC டிக்கெட் கிடைத்தாலும் வெயிட் லிஸ்டுக்கு மாறலாம்! காரணம் இதுதான்!

ராஜ் கௌதமன்:
எஸ். புஷ்பராஜ் என்ற இயற்பெயர் கொண்ட ராஜ் கௌதமன் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள புதுப்பட்டியில் 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தார். இவரது தங்கை பாமாவும் எழுத்தாளர்.
புதுப்பட்டியில் தொடக்கக் கல்வியும் மதுரையில் மேல்நிலைக்கல்வியும் முடித்தபின் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். பின் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையிலும் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
அ. மாதவையா குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அ.மாதவையாவின் மகனும் சூழலியல் எழுத்தாளருமான மா. கிருஷ்ணனுக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்தவர்.
ராஜ் கௌதமன் புதுச்சேரியில் காரைக்கால் அரசு கலைக்கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றினார். காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 2011ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
ராஜ் கௌதமனின் மனைவி முனைவர் க. பரிமளம் அவர்களும் தமிழ்ப் பேராசிரியர். தி. ஜானகிராமன் படைப்புகள் குறித்து ஆய்வு செய்திருக்கிறார்.
சட்ட செயல்முறையில் பாரபட்சம் காட்டக்கூடாது: புல்டோர் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
