05:50 PM (IST) Sep 15

ஆதார் துறையில் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. விவரம் இங்கே !!

இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) கீழ் ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனம் (NISG) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

05:31 PM (IST) Sep 15

சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை... நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிரடி..

ஒட்டுமொத்த நிதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என சங்கு சங்கர் பேசி இருந்த நிலையில் அவருக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இன்று அவருக்கு எதிரான வழக்கின் விசாரணை நடைபெற்றது. 

அப்போது சவுக்கு சங்கர் அதில் ஆஜராகியிருந்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணை முடிவுற்ற நிலையில் சவுக்கு சங்கர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது, அவரை போலீசார் சுற்றி வளைத்தனர், அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போதைய சவுக்கு சங்கருக்கு ஆறுமாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

04:51 PM (IST) Sep 15

NIEPMD தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ரூ.44,000 சம்பளத்தில் அரசு பணி.. விவரம் இங்கே

NIEPMD தேசிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

04:04 PM (IST) Sep 15

நீதிமன்றம் உத்தரவை மீறி மணல் கடத்தல் நடைபெறுவது எப்படி..? உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி..

மணல் திருட்டை தடுப்பதற்கு பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும், சட்ட விரோத மணல் கடத்தல் நடைபெறுவது எப்படி என்று மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் படிக்க

03:33 PM (IST) Sep 15

டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்பியூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

03:00 PM (IST) Sep 15

எடப்பாடியால் கட்சி அழியும்.. அதிமுககாரன் ஓட்டு பாஜகவுக்குதான்.. தலையில் அடித்து அலறும் பண்ருட்டி ராமச்சந்திரன்

எடப்பாடிக்கு போதிய அனுபவமும் ஆற்றலும் இல்லையென்ற தெரிவித்தவர், இதன் காரணமாக நடைப்பெற்ற மூன்று தேர்தலிலும் அதிமுகவை மக்கள் தோற்கடித்ததாக அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

02:54 PM (IST) Sep 15

உஷார் !! இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான மழை.. வானிலை அப்டேட்..

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

02:30 PM (IST) Sep 15

IAS,IPS, IFS பதவிகளுக்கான டிஎன்பிஎஸ் தேர்வு தேதி மாற்றம்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC ..

IAS,IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்து டிஎன்பிஎஸ் புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

02:04 PM (IST) Sep 15

CUET UG 2022 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. மதிப்பெண் பட்டியல் பதவிறக்கம் செய்வது எப்படி..? விவரம் இங்கே

CUET UG 2022: மத்திய பல்கலைக்கழகங்களின் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான சியுஇடி தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க

01:35 PM (IST) Sep 15

ரஜினியுடன் தேசிய விருது பெற்ற சிறுவன்-முதல்வரை சந்திக்க பல மணி நேரம் காத்திருந்து சந்திக்க முடியாமல் ஏமாற்றம்!

மதுரையில் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்த, முதல்வரை தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரம் நாக விஷால் சந்தித்து ஆசி பெற தன்னுடைய தாயுடன் பல மணிநேரம் காத்திருந்தும், முடியாமல் போனதால் ஏமாற்றம் அடைந்துள்ளார். மேலும் செய்திகள்...

01:35 PM (IST) Sep 15

கைதாகிறார் சவுக்கு சங்கர்..? மதுரை உயர்நீதிமன்றத்தில் சுற்றி வளைத்த போலீஸ்..

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்றும் சிறிது நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில் இருந்து சவுக்கு சங்கர் வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

01:24 PM (IST) Sep 15

'ஜெயிலர்' படப்பிடிப்பின் போது 'ஜவான்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் அடித்த ரஜினி! ஷாருக்கானுடன் நடந்த சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜவான்' படப்பிடிப்புக்கு சென்று பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சந்தித்து பேசியதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க...

01:19 PM (IST) Sep 15

இருள் அண்ட வாய்ப்பே இல்லை..நாட்டாமை...சின்னத்தம்பியுடன் வாரிசு படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த குஷ்பூ

இவர்கள் இருக்கையில் இருள் அண்டாது என்பது போன்று குறிப்பிட்டு இந்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் குஷ்பூ. 

இருள் அண்ட வாய்ப்பே இல்லை..நாட்டாமை...சின்னத்தம்பியுடன் வாரிசு படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த குஷ்பூ

01:14 PM (IST) Sep 15

நீட் முதுகலை கலந்தாய்வு இன்று தொடக்கம்.. தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமானவை.. விவரம் இங்கே..

நீட் முதுகலை மருத்துவபடிப்புகளுக்கான ( NEET PG Counselling 2022) கலந்தாய்வு முதல் சுற்று இன்று தொடங்கியது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மருத்துவ ஆலோசனைக் குழுவின் (MCC) அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in-ல் பதிவு செய்துக் கொள்ளலாம். தற்காலிக அட்டவணைப்படி, முதல் சுற்றுகள் வரும் 23 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் படிக்க

12:33 PM (IST) Sep 15

VTK review : "விமர்சனங்களை கேட்டு படம் பார்க்க காத்திருக்கிறேன்"..சிம்பு படத்திற்கு வாழ்த்து சொன்ன சூர்யா

படம் குறித்த நல்ல கருத்துக்களை கேட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும், இந்த படத்தைக் காண காத்திருப்பதாகவும் பதிவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சூர்யா.

VTK review : "விமர்சனங்களை கேட்டு படம் பார்க்க காத்திருக்கிறேன்"..சிம்பு படத்திற்கு வாழ்த்து சொன்ன சூர்யா

12:02 PM (IST) Sep 15

ரூ. 1.80 லட்சம் சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்..

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பதவிக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.கணினி வழி தேர்வு நடத்தப்படும் . அதில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

11:08 AM (IST) Sep 15

மக்கள் கவனத்திற்கு !! தமிழகத்தில் பரவி வரும் புதிய வகை காயச்சல்.. இதுவரை 282 குழந்தைகள் பாதிப்பு..

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்புளுன்ஸா காய்ச்சலால் யாரும் சிகிச்சை பெறவில்லை. சிகிச்சை பெறும் 129 குழந்தைகளில் 121 பேர் சாதாரண காய்ச்சலா பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.மேலும் படிக்க

11:07 AM (IST) Sep 15

HBD Ramya Krishnan : சிவகாமி தேவியாய் மனங்களில் நின்ற ரம்யா கிருஷ்ணன்!ஸ்ரீதேவிக்கு பதில் இவர் நடித்த காரணம்

ஸ்ரீதேவி அதிக சம்பளம் கேட்டதால் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் பாகுபலியில் நடிக்க ஒப்பந்தமானாராம்.

HBD Ramya Krishnan : சிவகாமி தேவியாய் மனங்களில் நின்ற ரம்யா கிருஷ்ணன்!ஸ்ரீதேவிக்கு பதில் இவர் நடித்த காரணம்

11:03 AM (IST) Sep 15

வார இறுதி வசூலில் டாப் 5 இடங்கள்.. பாகுபலி, ஆர்ஆர்ஆர் உட்பட சமீபத்திய வெற்றி படங்கள் எதுவும் இடம்பெறவில்லை

இதுவரை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியையும் வார இறுதி வசூலில் சாதனையும் படைத்த டாப் 5 படங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்...

வார இறுதி வசூலில் டாப் 5 இடங்கள்.. பாகுபலி, ஆர்ஆர்ஆர் உட்பட சமீபத்திய வெற்றி படங்கள் எதுவும் இடம்பெறவில்லை

10:43 AM (IST) Sep 15

பெயரளவில் கருத்து கேட்பு கூட்டம்..! அவசர கதியில் விமான நிலைய பணி- திமுக அரசுக்கு எதிராக சீறிய ஓபிஎஸ்

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தும்போது அப்பகுதி மக்களுடைய ஒப்புதலோடு நடவடிக்கை எடுக்குமாறும், ஒப்புதலைப் பெற முடியாவிட்டால் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க...