Asianet Tamil News live : தூத்துக்குடி துறைமுகத்துக்கு 6 வழிச்சாலை- ரூ. 200 கோடி ஒதுக்கீடு

Tamil News live updates today on March 26 2023

தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் ஆறுவழிச்சாலை அமைத்திட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் மொத்தம் 5.16 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த 6 வழிச் சாலை அமைக்கப்பட இருப்பதாகவும் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

3:09 PM IST

போஜ்புரி நடிகை ஆகன்ஷா டூபே தூக்கிட்டு தற்கொலை

ஓட்டல் அறையில் இருந்து நேற்று ஜாலியாக ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட நடிகை, இன்று அதே அறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

2:35 PM IST

மீண்டும் பிகினி உடையில் நயன்தாரா

ஜவான் படம் குறித்த மற்றுமொரு ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ஜவான் படத்தில் நடிகை நயன்தாரா பிகினி உடையணிந்து நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. பதான் படத்தில் தீபிகா படுகோனே பிகினியில் வந்து போல் ஜவான் படத்திலும் ஒரு காட்சி உள்ளதாகவும், அந்த காட்சியில் நடிகை நயன்தாரா பிகினி உடையணிந்து நடித்துள்ளதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. மேலும் படிக்க

1:50 PM IST

Cook With Comali 4 : குக் வித் கோமாளியில் திடீர் டுவிஸ்ட்... இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

12:19 PM IST

தூத்துக்குடி துறைமுகத்துக்கு ஆறு வழிச்சாலை... ரூ. 200 கோடி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

தூத்துக்குடி துறைமுகத்துக்கான போக்குவரத்தை மேம்படுத்த அங்கு ரூ.200 கோடி செலவில் ஆறு வழிச் சாலை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். மேலும் படிக்க

11:50 AM IST

ஹாய் செல்லம்! வில்லத்தனத்திலும் வெரைட்டிகாட்டி மிரளவைத்த வித்தகன்- பிரகாஷ்ராஜின் மறக்கமுடியாத மாஸ் கேரக்டர்கள்

நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரைப் பற்றியும் அவர்நடித்த மறக்க முடியாத 5 மாச் கதாபாத்திரங்கள் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

11:23 AM IST

‘பத்து தல’யில் ஐட்டம் டான்ஸ் ஆட சாயிஷா வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா? - அள்ளி கொடுக்காம கிள்ளி கொடுத்திருக்காங்க

சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தில் இடம்பெறும் ராவடி என்கிற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட நடிகை சாயிஷா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

10:47 AM IST

ஆரம்பிக்கலாமா... இறங்கி அடிக்க தயாரான ராகுல் காந்தி - விக்ரம் பட பாடலுடன் போட்ட சூசக பதிவு வைரல்

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பின்னணியில் விக்ரம் பட பாடலை ஒலிக்கவிட்டுள்ளார் ராகுல் காந்தி. மேலும் படிக்க

10:15 AM IST

டெல்லி ராஜ்காட் பகுதியில் 144  தடை உத்தரவு

டெல்லி, ராஜ்காட்டில் 144  தடை உத்தரவு. எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருக்க போலீஸ் அனுமதி மறுப்பு.

9:15 AM IST

36 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் எல்விஎம் 3 ராக்கெட்

பிரிட்டனைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்ளுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். 3 - எம்3 ராக்கெட் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சொந்த செயற்கைக்கோள்களை மட்டுமின்றி, வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோளையும் விண்ணில் செலுத்தி உள்ளது. மேலும் படிக்க

8:42 AM IST

சபரிமலையில் இன்று நடைதிறப்பு

பங்குனி உத்திரத்தையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

8:10 AM IST

ராகுல் காந்தியின் பதவி பறிப்புக்கு எதிராக தமிழகத்தில் சத்தியாகிரக போராட்டம் நடத்தும் காங்கிரஸ்

ராகுல்காந்திக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் இன்று சத்தியாகிரக போராட்டம் நடத்த உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு அறப்போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு மற்றும் எம்.பி பதவி பறிப்பு ஆகியவற்றை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.

7:56 AM IST

36 செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்-3 ராக்கெட்

எல்.வி.எம்-3 ராக்கெட் 36 ஒன்வெப் செயற்கைகோள்களை சுமந்தப்படி இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக் கட்டப்பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

7:41 AM IST

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

காஞ்சிபுரம் குருவிமலை பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழப்பு. கடந்த மார்ச் 22-ந் தேதி குருவிமலையில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

7:33 AM IST

ராஜஸ்தான் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கம் - அலறியடித்து ஓடிய மக்கள்

அருணாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அம்மாநிலத்தின் சங்லாங் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது.

அதேபோல் ராஜஸ்தானிலும் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானெர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. மேலும் படிக்க

3:09 PM IST:

ஓட்டல் அறையில் இருந்து நேற்று ஜாலியாக ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட நடிகை, இன்று அதே அறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

2:35 PM IST:

ஜவான் படம் குறித்த மற்றுமொரு ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ஜவான் படத்தில் நடிகை நயன்தாரா பிகினி உடையணிந்து நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. பதான் படத்தில் தீபிகா படுகோனே பிகினியில் வந்து போல் ஜவான் படத்திலும் ஒரு காட்சி உள்ளதாகவும், அந்த காட்சியில் நடிகை நயன்தாரா பிகினி உடையணிந்து நடித்துள்ளதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. மேலும் படிக்க

1:50 PM IST:

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

12:19 PM IST:

தூத்துக்குடி துறைமுகத்துக்கான போக்குவரத்தை மேம்படுத்த அங்கு ரூ.200 கோடி செலவில் ஆறு வழிச் சாலை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். மேலும் படிக்க

11:50 AM IST:

நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரைப் பற்றியும் அவர்நடித்த மறக்க முடியாத 5 மாச் கதாபாத்திரங்கள் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

11:23 AM IST:

சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தில் இடம்பெறும் ராவடி என்கிற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட நடிகை சாயிஷா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

10:47 AM IST:

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பின்னணியில் விக்ரம் பட பாடலை ஒலிக்கவிட்டுள்ளார் ராகுல் காந்தி. மேலும் படிக்க

10:15 AM IST:

டெல்லி, ராஜ்காட்டில் 144  தடை உத்தரவு. எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருக்க போலீஸ் அனுமதி மறுப்பு.

9:15 AM IST:

பிரிட்டனைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்ளுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். 3 - எம்3 ராக்கெட் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சொந்த செயற்கைக்கோள்களை மட்டுமின்றி, வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோளையும் விண்ணில் செலுத்தி உள்ளது. மேலும் படிக்க

8:42 AM IST:

பங்குனி உத்திரத்தையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

8:10 AM IST:

ராகுல்காந்திக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் இன்று சத்தியாகிரக போராட்டம் நடத்த உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு அறப்போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு மற்றும் எம்.பி பதவி பறிப்பு ஆகியவற்றை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.

7:56 AM IST:

எல்.வி.எம்-3 ராக்கெட் 36 ஒன்வெப் செயற்கைகோள்களை சுமந்தப்படி இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக் கட்டப்பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

7:41 AM IST:

காஞ்சிபுரம் குருவிமலை பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழப்பு. கடந்த மார்ச் 22-ந் தேதி குருவிமலையில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

7:33 AM IST: