ஓட்டல் அறையில் இருந்து நேற்று ஜாலியாக ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட நடிகை, இன்று அதே அறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

போஜ்புரி படங்களில் நடித்து பிரபலமானவர் ஆகன்ஷா டூபே. 25 வயதே ஆகும் இவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்சாபூரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு சோசியல் மீடியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் 17 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருக்கிறார் ஆகன்ஷா.

இதனால் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். அந்த வகையில் படத்தின் ஷூட்டிங்கிற்காக வாரணாசி சென்றிருந்த அவர், அங்கிருந்த பனாரஸ் சர்நாத் ஓட்டலில் தங்கி இருந்துள்ளார். நேற்று ,மாலை ஓட்டலில் இருந்தபடி உற்சாகமாக நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்த அவர் இன்று அதே ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டு உள்ளார்.

இதையும் படியுங்கள்... Cook With Comali 4 : குக் வித் கோமாளியில் திடீர் டுவிஸ்ட்... இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?

View post on Instagram

25 வயதே ஆகும் நடிகை ஆகன்ஷா டூபே தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் போஜ்புரி திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், அவரது மரணத்திற்கான காரணம் என்பதை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். நடிகை ஆகன்ஷாவின் செல்போனையும் கைப்பற்றி அதனையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

நடிகை ஆகன்ஷா கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினத்தன்று தான் சமர் சிங் என்கிற நடிகை காதலித்து வருவதாக அறிவித்து அவருடன் எடுத்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இதனால் காதலனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆகன்ஷா தற்கொலை செய்து கொண்டாரா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஆகன்ஷாவின் மரணத்தால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

View post on Instagram

இதையும் படியுங்கள்... மீண்டும் பிகினி உடையில் நயன்தாரா...? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!