Cook With Comali 4 : குக் வித் கோமாளியில் திடீர் டுவிஸ்ட்... இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஷெரின், விசித்ரா, ஸ்ருஷ்டி, ராஜ் அய்யப்பா, மைம் கோபி என புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டு உள்ளனர். குறிப்பாக கடந்த சீசன் வரை கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி, இந்த சீசனில் குக் ஆக களமிறங்கி கலக்கி வருகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசனில் வழக்கம்போல் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் தான் நடுவர்களாக இருந்து வருகின்றனர். இந்த சீசனில் இதுவரை 8 வாரங்கள் முடிந்துள்ளன. அதில் இதுவரை கிஷோர் மற்றும் காளையன் ஆகிய 2 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். இந்த வாரம் 3-வது எலிமினேஷன் டாஸ்க் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்... ஹாய் செல்லம்! வில்லத்தனத்திலும் வெரைட்டிகாட்டி மிரளவைத்த வித்தகன்- பிரகாஷ்ராஜின் மறக்கமுடியாத மாஸ் கேரக்டர்கள்
கடந்த வாரம் நடந்த இம்யூனிட்டி டாஸ்க்கில் ஆண்ட்ரியன் வெற்றி பெற்றதால் அவர் இந்த வாரம் சமைக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. எஞ்சியுள்ள விசித்ரா, ராஜ் அய்யப்பா, ஷெரின், சிவாங்கி, ஸ்ருஷ்டி, விஷால் மற்றும் மைம் கோபி ஆகிய 7 குக்குகள் இடையே தான் கடும்போட்டி நிலவியது. இதில் நேற்று நடைபெற்ற அட்வாண்டேஜ் டாஸ்க்கில் விசித்ரா வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இன்றைய எபிசோடின் இறுதியில் ராஜ் அய்யப்பா மற்றும் ஷெரின் ஆகியோர் தான் டேஞ்சர் ஜோனில் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையே கடைசியில் டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் ஷெரின் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதால், ராஜ் அய்யப்பா இந்த போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். ராஜ் அய்யப்பா வலிமை படத்தில் நடிகர் அஜித்துக்கு தம்பியாக நடித்தவர் ஆவார். குக் வித் கோமாளி சீசன் 4-ல் இதுவரை எலிமினேட் ஆகி உள்ள 3 பேருமே ஆண்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கடைசி பட இயக்குனரை தேர்வு செய்த ரஜினிகாந்த்! கமுக்கமாக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ்? சீக்ரெட் காக்க இது தான் காரணமா