ஹாய் செல்லம்! வில்லத்தனத்திலும் வெரைட்டிகாட்டி மிரளவைத்த வித்தகன்- பிரகாஷ்ராஜின் மறக்கமுடியாத மாஸ் கேரக்டர்கள்
நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரைப் பற்றியும் அவர்நடித்த மறக்க முடியாத 5 மாச் கதாபாத்திரங்கள் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முத்துப்பாண்டி (கில்லி)
பிரகாஷ் ராஜ் என்றதுமே அவர் பேசிய ஹாய் செல்லம் என்கிற டயலாக் தான் நினைவுக்கு வரும். அந்த டயலாக் இடம்பெற்ற திரைப்படம் தான் கில்லி. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் பிரகாஷ் ராஜ். இதில் முத்துப்பாண்டி என்கிற டெரரான வில்லனாக அவர் இருந்தாலும், திரிஷாவை பார்த்ததும் பூ போல் உருகி உருகி காதலித்து அசத்தி இருப்பார். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய பிரகாஷ் ராஜும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.
டாக்டர் விஸ்வநாதன் (வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்)
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்திருப்பார் பிரகாஷ் ராஜ். அப்படத்தில் காமெடி கலந்து நடித்து வில்லனாகவும் அசர வைத்திருப்பார் பிரகாஷ் ராஜ். இப்படத்தில் அவருக்கு சண்டைக்காட்சிகளே இருக்காது. ஆனால் தனது டயலாக் டெலிவெரி மூலமே வில்லத்தனத்தை ரசிகர்களுக்கு கடத்தி இருப்பார் பிரகாஷ் ராஜ்.
அலிபாய் (போக்கிரி)
பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் போக்கிரி. இப்படத்தில் அலிபாய் என்கிற டான் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பிரகாஷ் ராஜ். இதில் அவரை தூங்கக்கூடாது என்கிற நூதன தண்டனை கொடுத்து, அதனை நெபோலியன் கண்காணிக்கும் காட்சியில் நடிப்பில் அசத்தி இருப்பார் பிரகாஷ் ராஜ்.
இதையும் படியுங்கள்... ‘பத்து தல’யில் ஐட்டம் டான்ஸ் ஆட சாயிஷா வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா? - அள்ளி கொடுக்காம கிள்ளி கொடுத்திருக்காங்க
மயில்வாகனம் (சிங்கம்)
சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் சிங்கம். ஹரி இயக்கிய இப்படத்தில் மயில்வாகனம் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பிரகாஷ் ராஜ். இதில் சூர்யாவும், பிரகாஷ் ராஜும் எலியும் பூனையுமாக மாத்தி மாத்தி சண்டையிட்டுக் கொள்வது தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
ஜானகிராமன் (பாவக்கதைகள்)
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான பாவக் கதைகள் என்கிற ஆந்தாலஜி படத்தில் ஓர் இரவு என்கிற குறும்படத்தில் ஜானகிராமன் என்கிற கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். இதில் பிரகாஷ் ராஜின் மகளாக சாய் பல்லவி நடித்திருப்பார். சாய் பல்லவி தாழ்ந்த ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொள்வார். இது சுத்தமாக பிடிக்காத பிரகாஷ் ராஜ், ஓடிப்போன தன் மகளை பாசமாக வீட்டுக்கு அழைத்து வந்து, அவரை கொடூரமாக ஆணவக்கொலை செய்வார். முதலில் சாந்தமான, அன்பான தந்தையாக இப்படத்தின் நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ், இறுதியில் ஜாதி வெறி பிடித்த தந்தையாக தனது வில்லத்தனத்தை காட்டி மிரளவைத்து இருப்பார்.
இதையும் படியுங்கள்... பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காக நான் தண்டிக்கப்பட்டேன் - நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்