ISRO: 36 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் எல்விஎம் 3 ராக்கெட்
இஸ்ரோவின் மிக அதிக எடை கொண்ட ராக்கெட்டான LVM3 இன்று காலை சரியாக 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டு 36 செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட்டன.
பிரிட்டனைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் செயற்கைக்கோள்ளுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். 3 - எம்3 ராக்கெட் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. 36 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சொந்த செயற்கைக்கோள்களை மட்டுமின்றி, வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோளையும் விண்ணில் செலுத்துகிறது. அதன்படி, பிரிட்டன் நாட்டின் ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி 36 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மீதமுள்ள 36 செயற்கைக்கோள்கள் எல்விஎம்3 - எம்3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, சரியாக காலை 9 மணிக்கு எல்விஎம்3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
மோடி என்றாலே ஊழல் தானே! வைரலாகும் குஷ்புவின் பழைய ட்வீட்!
36 சாட்டிலைட்களைத் தாங்கிச் செல்லும் இந்த எல்விஎம்3 - எம்3 ராக்கெட் இஸ்ரோவின் தயாரிப்புகளில் மிக அதிக எடை கொண்டது என்பதும் குறிப்பிட்டத்தக்கது. இந்த ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும் 643 டன் எடையும் கொண்டது. 3-நிலைகளை கொண்ட இது 8 டன் அளவிலான எடையைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்த வகை ராக்கெட்டுகள் மூலம் ஏற்கெனவே உள்பட 5 முறை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று 6வது முறையாகவும் வெற்றிகரமாக 36 செயற்கைக்கோள்களைத் தாங்கி விண்ணில் சீறிப் பாய்ந்தது.
மோடி என்றாலே ஊழல் தானே! வைரலாகும் குஷ்புவின் பழைய ட்வீட்!