மோடி என்றாலே ஊழல் தானே! வைரலாகும் குஷ்புவின் பழைய ட்வீட்!
நடிகை குஷ்பூ 2015ஆம் ஆண்டில் காங்கிரஸ் உறுப்பினராக இருந்தபோது மோடி என்றால் ஊழல் என்று டிவிட்டரில் பதிவிட்டது இற்போது வைரலாகியுள்ளது.
மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதன் தொடர்ச்சியாக தகுதிநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு 2018ஆம் ஆண்டில் மோடி பற்றி எழுதிய ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
அதில், "மோடி என்று பெயர் கொண்டவர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். இனி மோடி என்றாலே ஊழல் என்று மாற்றிவிடலாம். அதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். நிரவ், லலித், நமோ = ஊழல்" எனக் கூறியிருந்தார். இந்தப் பதிவை 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி அவர் எழுதியுள்ளார். அப்போது குஷ்புக காங்கிரஸ் கட்சியிலும் இருந்தார். 2020ஆம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
ஒரு பத்திரிக்கையாளராக இருந்து பாஜக ஆதரவு கேள்விகளை இங்கே கேட்காதீர்கள்! - ராகுல்காந்தி காட்டம்!
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசி தரூர், திக்விஜய் சிங் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளத்தில் குஷ்பூவின் இந்த ட்வீட்டைப் பகிர்ந்து வருகிறார்கள். சசி தரூர் குஷ்பூவின் பழைய ட்வீட்டை ரீட்வீட் செய்து, பாஜக எம்எல்ஏக்கள் யாரும் கண்டிப்பாக இதுபற்றி வழக்குத் தொடர மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பூர்ணேஷ் மோடி, குஷ்பு மீதும் வழக்குப்பதிவு செய்வாரா என காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனிடையே, தனது பழயை ட்வீட் பற்றி கருத்து கூறியுள்ள குஷ்பு, "காங்கிரஸ் கட்சி என் பழைய ட்வீட்டைப் பகிர்ந்துவருவது அவர்கள் எவ்வளவு அவநம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்று காட்டுகிறது" எனக் கூறியுள்ளார். மேலும், "நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது வெளியியிட்ட 'மோடி' பற்றிய ட்வீட் குறித்து நான் வெட்கப்படவில்லை. அப்போது நான் அந்தக் கட்சித் தலைவரைப் பின்பற்றி, அந்தக் கட்சியின் மொழியில்தான் பேசினேன்" எனவும் தெரிவித்திருக்கிறார்.
மோடி என்ற பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாகப் பேசிவிட்டார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ள நிலையில், குஷ்புவும் அதேபோல பொருள்படும் வகையில் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கின்றனர்... ராகுல் தகுதி நீக்கம் குறித்து துரைமுருகன் கருத்து!!