இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கின்றனர்... ராகுல் தகுதி நீக்கம் குறித்து துரைமுருகன் கருத்து!!
ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அனைத்து தலைவர்களும் கூறுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அனைத்து தலைவர்களும் கூறுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறை தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதனை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: https://tamil.asianetnews.com/politics/tn-congress-has-announced-a-satyagraha-protest-tomorrow-for-condemning-rahul-gandhis-demotion-rs38vd
இந்த நிலையில் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அனைத்து தலைவர்களும் கூறுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் இந்த நிகழ்வு நடந்ததாக கருதவில்லை. நீண்ட நாள் வழக்கு நடந்து அதன் பிறகு அவருக்கு ஏற்பட்டிருக்கும் அந்த அவகாசத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் செல்ல வாய்ப்பு இருந்தது.
இதையும் படிங்க: பாஜகவின் ஆதரவு இல்லாமல் அதிமுகவால் செயல்பட முடியாது... சி.டி.ரவி அதிரடி!!
நீதிமன்றம் கதவை திறந்தது. ஆனால் ராகுல் காந்தி அதை பயன்படுத்தும் முன்பே அவசர அவசரமாக இப்படிப்பட்ட தண்டனையை வழங்கி இருப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. நாட்டை மெஜாரிட்டியுடன் ஆளும் ஒரு கட்சி தனி மனிதனைக் கண்டு அஞ்சுகிறது என்கிற சூழ்நிலை அரசியல் நோக்கர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அனைத்து தலைவர்களும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளார்கள். சிபிஐ தவறாக மத்திய அரசை பயன்படுத்துவது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அது குறித்து எதுவும் பேச முடியாது என்று தெரிவித்துள்ளார்.