பாஜகவின் ஆதரவு இல்லாமல் அதிமுகவால் செயல்பட முடியாது... சி.டி.ரவி அதிரடி!!
பாஜகவின் ஆதரவு இல்லாமல் அதிமுகவால் செயல்பட முடியாது என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் ஆதரவு இல்லாமல் அதிமுகவால் செயல்பட முடியாது என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக இடையே சிறு சலசலப்பு நிலவி வருகிறது. அதிமுகவில் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் அண்ணாமலையின் சமீபத்திய பேச்சு ஒன்று அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ராகுல் இப்போ சொன்னத இவங்க அப்போவே சொல்லிட்டாங்க... பழைய டிவீட்டால் மாட்டிக்கொண்ட குஷ்பு!!
மேலும் பாஜக கூண்டை விட்டு பறக்க தயாராகிவிட்டதாகவும், தமிழகத்தில் அரசியல் களம் மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதிமுகவால் பாஜகவின் ஆதரவு இல்லாமல் செயல்பட முடியாது என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரியான பாதையில் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: ராகுல்காந்தி பதவி பறிப்பு, சிறை ஆகியவற்றிற்கு கண்டனம்... நாளை சத்தியாகிரக போராட்டத்தை அறிவித்தது தமிழக காங்.!!
தமிழகத்திற்கு அண்ணாமலை செய்யும் அரசியல்தான் சரியானது. அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறியிருப்பது பாஜகவுக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது. அண்ணாமலை இதுபோன்ற கருத்துகளை கூறினால் மட்டுமே அதிமுகவினர், பாஜகவுடன் கூட்டணி வைக்க முன்வருவார்கள். ஏனெனில் அதிமுகவால் பாஜகவின் ஆதரவு இல்லாமல் செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளார்.