ராகுல் இப்போ சொன்னத இவங்க அப்போவே சொல்லிட்டாங்க... பழைய டிவீட்டால் மாட்டிக்கொண்ட குஷ்பு!!
மோடிக் குறித்து பேசிய ராகுல்காந்தி மீது நடவடிக்கை பாய்ந்த நிலையில் நடிகை குஷ்புவும் மோடி குறித்து விமர்சித்த பழைய டிவிட்டர் பதிவு தற்போது நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.
மோடிக் குறித்து பேசிய ராகுல்காந்தி மீது நடவடிக்கை பாய்ந்த நிலையில் நடிகை குஷ்புவும் மோடி குறித்து விமர்சித்த பழைய டிவிட்டர் பதிவு தற்போது நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல்காந்தி மோடி குறித்து பேசியது சர்ச்சையானதை அடுத்து அவதூறாக பேசியதாகக் கூறி, ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மோடி குறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒரு பத்திரிக்கையாளராக இருந்து பாஜக ஆதரவு கேள்விகளை இங்கே கேட்காதீர்கள்! - ராகுல்காந்தி காட்டம்!
அதில், எங்கே பார்த்தாலும் மோடி என்ற பெயர்தான் வைத்திருக்கிறார்கள். அந்த பெயரை வைத்துள்ளவர்கள் அனைவரும் ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே, மோடி என்ற பெயருக்கான அர்த்தத்தை ஊழல் என மாற்றிவிடுவோம் என்று தெரிவித்துள்ளார். இதுப்போன்ற கருத்தை ராகுல்காந்தி கூறியதால் அவருக்கு சிறை தண்டனை, பதவி பறிப்பு உள்ளிட்ட நடிவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது பாஜகவில் உள்ள குஷ்பு, காங்கிரஸில் இருக்கும் போது போட்ட பதிவு தற்போது நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது. இது குஷ்புவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகா மாநிலத்தில் ஒக்கலிக்கர், லிங்காயத் சமூகத்தினரை ஈர்க்க பாஜக புதிய திட்டம்!!
இந்த நிலையில் இந்த டிவீட் குறித்து விளக்கம் அளித்துள்ள நடிக்கை குஷ்பு, என்னுடைய பழைய ட்வீட்டை பற்றி காங்கிரஸ் கட்சி பேசுவது அவர்கள் எவ்வளவு அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது மோடி குறித்து ட்வீட் போட்டதற்கு நான் வெட்கப்படவில்லை. அப்போது, எந்த கட்சியில் இருந்தேனோ அதன் தலைவர் மற்றும் அந்த கட்சியின் கருத்தையே நான் பேசினேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது நடிகை குஷ்பு தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.