ஒரு பத்திரிக்கையாளராக இருந்து பாஜக ஆதரவு கேள்விகளை இங்கே கேட்காதீர்கள்! - ராகுல்காந்தி காட்டம்!

ஓபிசி சமூகத்தையும் விமர்சிக்கவில்லையா என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு, பதில் சொல்ல மறுத்த ராகுல்காந்தி, நீங்கள் பாஜகவின் செய்தி தொடர்பாளர் தானா என கேட்டடதால் பரபரப்பை ஏற்பட்டது.
 

Do not ask pro-BJP questions here as a journalist! - Rahul Gandhi

கடந்த 2019ல், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த ராகுல் காந்தி, ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்தார். இதற்காக நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையொட்டி, செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தியிடம், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் போது ஒட்டுமொத்த ஓபிசி சமூகத்தையும் விமர்சிக்கவில்லையா என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு, பதில் சொல்ல மறுத்து, நீங்கள் பாஜகவின் செய்தி தொடர்பாளர் தானா என கேட்டடதால் பரபரப்பை ஏற்பட்டது.

சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில், ராகுல்காந்தி அதானி விவகாரம் குறித்து பேசினார். 2019-ம் ஆண்டில், அந்த அறிக்கைக்கு மன்னிப்பு கேட்குமாறு ஊடகங்கள் அவரிடம் பலமுறை கேட்டபோதும், அது இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கு விவகாரம் குறித்து தான் பேச விரும்பவில்லை என்றும் கூறினர்.

செய்தியாளர் சந்திப்பின் முடிவில், ராகுல் காந்தியிடம் மீண்டும் அதே போன்ற கேள்வியை ஒரு பத்திரிக்கையாளர் கேட்டபோது, கோபமடைந்த ராகுல்காந்தி, தாங்கள் பாஜக செய்தி தொடர்பாளரா? என்றார், ஒரு பத்திரிக்கையாளராக இருந்துகொண்டு இந்த கேள்விகளை கேட்க வேண்டாம் என்றார். இல்லையென்றால், நெஞ்சில் பாஜக சின்னத்துடன் வாருங்கள், வந்து இதே கேள்வியை கேட்பீர்களானால், பாஜகவுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமோ அப்படி சொல்வேன் என்றார்.


இறுதியாக பேசிய ராகுல்காந்தி, 'என்னை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்தாலும், என் பணியை தொடர்ந்து செய்வேன். நான் நாடாளுமன்றத்திற்குள் இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை. நாட்டுக்காக தொடர்ந்து போராடுவேன் என்றார்.

 

Read more : எப்போ பங்களாவை காலி செய்ய போறீங்க.? ஒரு மாசம் டைம் - ராகுல் காந்திக்கு புது நெருக்கடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios