Asianet News TamilAsianet News Tamil

மன்னிப்பு கேட்பதற்கு நான் சாவர்க்கர் கிடையாது.. மோடியின் கண்களில் பயம்.!! ராகுல் காந்தி ஆவேசம்

“மோடி வெளிநாடு சென்றபோதொல்லாம் அதானி குழுமத்துக்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டேன்” என்று குற்றஞ்சாட்டி உள்ளார் ராகுல் காந்தி.

My name is not Savarkar, wont apologize Rahul Gandhi on disqualification
Author
First Published Mar 25, 2023, 2:19 PM IST

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.  பாராளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற முடியவில்லை. அதானி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசிய எனது பேச்சுகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.  பாராளுமன்றத்தில் என்னைப்பற்றி தவறான குற்றச்சாட்டுக்களை மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

My name is not Savarkar, wont apologize Rahul Gandhi on disqualification

பாராளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பியதில் இருந்து பிரச்சனை தொடங்கியது.   தகுதி நீக்கத்தைப்பற்றி எனக்கு கவலை இல்லை.  தகுதி நீக்கத்தால் எனது குரலை ஒடுக்க முடியாது.  அதானி பிரச்சனையை திசை திருப்ப நாடகம். பிரதமர் மோடியே நோக்கி 3 கேள்விகளை முன்வைத்தேன். 

அதானி குழுமத்தில் ரூ.20,000 கோடி முதலீடு செய்த நிறுவனங்கள் யாருடையது, அந்த பணம் யாருடையது?  மோடி வெளிநாடு சென்றபோதொல்லாம் அதானி குழுமத்துக்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டேன்.  அதானிக்காக விமான நிலையங்களின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டன. மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை.

இதையும் படிங்க..அதானிக்கு 20,000 கோடி எங்கிருந்து வந்தது.? சிறையில் அடைத்தாலும் கேள்வி கேட்பேன் - பிரதமருக்கு ராகுல் கேள்வி  

My name is not Savarkar, wont apologize Rahul Gandhi on disqualification

அதானி குழும முறைகேடு விவகாரத்தில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு உள்ளது.  பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து பாரளுமன்றத்தில் புதிய தகவலை பேசிவிடுவேன் என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன்.  ஒருபோதும் வெளிநாடுகளை இந்திய ஜனநாயகத்தில் தலையிடும்படி நான் கேட்டதில்லை. அதானி விவகாரம் தொடர்பாக அடுத்ததாக நாடாளுமன்றத்தில் நான் பேச இருந்தது குறித்து மோடி பயப்பட்டார். 

அதை அவர் கண்களில் நான் பார்த்தேன். அந்தப் பேச்சு நாடாளுமன்றத்தில் பதிவாகக் கூட்டது என அவர் நினைத்தார். முதலில் அதை திசை திருப்பினார், தற்போது என்னை தகுதி நீக்கம் செய்துள்ளார்.  எனக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றி. அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். நாட்டு மக்களின் ஜனநாயகத்திற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் என் பணியைச் செய்வேன்” என்று பேசினார்.

இதையும் படிங்க..உச்ச நீதிமன்றத்துக்கு போக முடியாது.. பதவியும் போச்சு.! என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி.?

Follow Us:
Download App:
  • android
  • ios