சந்திரசேகர் ராவின் கட்சியான பாரத ராஷ்டிர சமிதியின் நிதி ரூ.1,250 கோடியைத் தொட்டுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Asianet Tamil News Live: ராகுல்காந்தி அழைப்பை ஏற்று கர்நாடக தேர்தலில் கமல்ஹாசன் பரப்புரை?
Asianet Tamil News Live: ராகுல்காந்தி அழைப்பை ஏற்று கர்நாடக தேர்தலில் கமல்ஹாசன் பரப்புரை?

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தனக்கு அழைப்புக் கடிதம் அனுப்பியதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், ராகுல் காந்தி தன்னிடம் அலைபேசியில் பேசியதாகவும், அத்துடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நடைபெற இருக்கும் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அழைப்புக்கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுக்குறித்த முடிவை தான் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பணக்கார கட்சியாக வளரும் பாரத ராஷ்டிர சமிதி.. 1250 கோடி கட்சி நிதியை எட்டிய சந்திரசேகர் ராவின் கட்சி
ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி இதழின் சிறப்பு பதிப்பு.. வெளியிட்ட ஆயுஷ் அமைச்சகம்.!!
ஆயுஷ் அமைச்சகம், ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் (CCRAS), ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி இதழின் (JRAS) அதிகாரப்பூர்வ ஆராய்ச்சி வெளியீட்டின் சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கிய சுஷாந்த் சிங் ராஜ்புத்..எப்புட்றா.! எலான் மஸ்க்கை ஓடவிட்ட நெட்டிசன்கள்
முன்னாள் ட்விட்டர் இந்தியாவின் தலைவர் மணீஷ் மகேஸ்வரி எலான் மஸ்குக்கு எழுப்பிய கேள்வி ட்ரெண்டாகி வருகிறது.
டெல்லி ஏர்போர்ட்டில் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் சென்றபோது அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை எதிர்பாராத விதமாக சந்தித்தார்.
2050ல் பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும்.. அப்போ காவேரி ஆறு என்னவாகும்? அதிர்ச்சி தகவல்
வரப்போகிற 2050 ஆம் ஆண்டில் பெங்களூரு ஒரு நாளைக்கு 514 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுட்டெரிக்கும் கோடை வெயில்.. பள்ளிகள் திறப்பு தள்ளிபோகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட பரபரப்பு தகவல்.!
தமிழ்நாட்டில் கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
என்டிஆர் நூற்றாண்டு விழா: சூப்பர்ஸ்டார் ரஜினியை வரவேற்ற பாலகிருஷ்ணா..வைரல் வீடியோ!!
என்டிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த சூப்பர்ஸ்டார் ரஜினியை விமான நிலையத்தில் வரவேற்றார் நடிகர் பாலகிருஷ்ணா.
அச்சச்சோ அதுக்குள்ளயா... இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்ட ‘பொன்னியின் செல்வன் 2’ - படக்குழு அதிர்ச்சி
மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் 2-வை பைரசி தளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் படிக்க
Karnataka Elections : 6 நாட்களில் 22 பேரணிகள்.. நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி..
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை முதல் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
போர் காரணமாக பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்.. இந்திய கார்கள், உணவுப் பொருட்களை குறிவைக்கும் ரஷ்யா..
போர் காரணமாக ரஷ்யாவில் பொருட்களின் விநியோகம் குறைந்துள்ளதால், இந்தியா சில பொருட்களை வழங்க வேண்டும் என்று ரஷ்யா கோருகிறது.
ஆபரேஷன் காவேரி.. 10-வது பேட்ச் இந்தியர்கள் சூடானில் இருந்து வெளியேற்றம்.. மத்திய அரசு தகவல்..
10-வது பேட்ச் இந்தியர்களை போர்ட் சூடானில் இருந்து சவுதி நகரமான ஜெட்டாவிற்கு வெளியேற்றியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு
கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
“ பி.எல்.ஏ-வின் அத்துமீறல்கள் உறவுகளை சிதைத்துவிட்டன.. ” சீன பாதுகாப்பு அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் தகவல்
தற்போதுள்ள ஒப்பந்தங்களை மீறுவது இருதரப்பு உறவுகளின் முழு அடிப்படையையும் சிதைத்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபுவிடம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் சொத்து வாங்கும் இந்தியர்களுக்கு நெருக்கடி; என்ன காரணம்?
பெரு நகரங்களில் வீடு வாங்கும் வெளிநாட்டிருக்கான முத்திரை கட்டணத்தை சிங்கப்பூர் அரசு இரட்டிப்பாக்கி உள்ளது.
CTET 2023 : மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்
வரும் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள CTET தேர்வுக்கான விண்ணப்பிப்பதிவு தொடங்கி உள்ளது.
முதல்வர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியில் தீவைப்பு.. 144 தடை.! மொபைல் சேவை கட்.! அதிர வைக்கும் பின்னணி
சிஆர்பிசியின் பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? விடை கொடுத்தாரா மணிரத்னம்? - பொன்னியின் செல்வன் 2 விமர்சனம் இதோ
லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி இருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Gold Rate Today : இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.! தங்கத்தின் விலை குறைந்தது - எவ்வளவு தெரியுமா?
கடந்த சில வாரங்களாக உச்சத்தை தொட்டு வரும், தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலையை காணலாம்.
கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்கு ஆப்பு..! காடுகள் சேதம்.. கால்வாய் சேதம்.! கடுப்பான தனுஷ்
3 மாத படப்பிடிப்பிற்கு பிறகு கேப்டன் மில்லர் படக்குழுவுக்கு படப்பிடிப்பு அனுமதி கிடைத்துள்ளது.
அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்
அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரியம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.