லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி இருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஜெயராம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமாக இருந்த இதனை நனவாக்கிய பெருமை மணிரத்னத்தை தான் சேரும். ஏற்கனவே முதல் பாகத்தின் மூலம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்த இப்படக்குழு தற்போது இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதேபோல் லைகா நிறுவனம் தான் இப்படத்தை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்து உள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று உலகமெங்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை டுவிட்டரில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... முன்பதிவின் மூலம் மட்டும் இத்தனை கோடி வசூலா! ரிலீசுக்கு முன்பே கலெக்‌ஷனில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் 2

படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “பொன்னியின் செல்வன் 2 ஒரு மாஸ்டர்பீஸ். இவ்வளவு பிரம்மாண்டமான மற்றும் புத்திசாலித்தனமான திரைப்படத்தை கொண்டு வந்ததற்காக மணிரத்னத்தை பாராட்ட வேண்டும். கதைக்களம், கதாபாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் மற்றும் இசை அற்புதமாக இருந்தது. விக்ரம், ஐஸ்வர்யாராய் மற்றும் த்ரிஷாவின் நடிப்பு வேறலெவல். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்” என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொரு பதிவில், “பொன்னியின் செல்வன் 2 வெறித்தனமாக உள்ளது. உண்மையாகவே இது தான் இந்திய சினிமாவின் பெருமைக்குரிய படம். டோலிவுட் ரசிகர்களே மன்னிச்சிடுங்க. பாகுபலி 2-வை விட பொன்னியின் செல்வன் 2 அருமையாக உள்ளது. பாக்ஸ் ஆபிஸ் ஆபத்தில் உள்ளது” என குறிப்பிட்டுளார்.

Scroll to load tweet…

மற்றொரு டுவிட்டில், “பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அருமையாக உள்ளது. கான்செப்ட்டை புரிந்துகொண்டால் இது பாகுபலியைவிட பெரிய படம் என்பதை உணர்வீர்கள். அதிக எதிர்பார்ப்புடன் செல்லுங்கள். மணிரத்னத்தின் மேஜிக் சூப்பராக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. பாகுபலி பட சாதனைகளை பொன்னியின் செல்வன் தகர்த்தெறியும்” என கூறி உள்ளார்.

Scroll to load tweet…

மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “பொன்னியின் செல்வன் 2 தீயாய் இருக்கிறது. சீயான் விக்ரம் ஆதித்த கரிகாலனாக மிரட்டி இருக்கிறார். ஐஸ்வர்யா ராயின் நடிப்பும் அழகும் வேறலெவல். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் சூப்பராக உள்ளது” என குறிப்பிட்டு உள்ளார்.

Scroll to load tweet…

இன்னொரு டுவிட்டில், ”உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் பொன்னியின் செல்வன் 2 இரண்டு நடிகர்களின் ஷோ என கூறலாம். சியான் விக்ரமும், ஐஸ்வர்யா ராயும் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறார்கள். மொத்த படத்தையும் தாங்கிச் செல்கிறார்கள்” என பாராட்டி பதிவிட்டு உள்ளார்.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…

இப்படி பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு தொடர்ந்து பல்வேறு பாசிடிவ் விமர்சனங்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. மேற்கண்ட விமர்சனங்களைப் பார்க்கும்போது படமும் வேறலெவலில் இருப்பதாக தெரிகிறது. இதன்மூலம் இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் என்பது உறுதியாக தெரிகிறது.

பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்ததற்கு காரணம் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக தான். கல்கி தன்னுடைய நாவலில் இதனை ஒரு மர்மமாகவே வைத்திருப்பார். அந்த மர்மத்தை இப்படத்தில் மணிரத்னம் எப்படி கையாண்டுள்ளார் என்பதை வெளியிட்டு அது ஸ்பாயிலராகிவிடக் கூடாது என்பதற்காக படம் பார்த்த நெட்டிசன்கள் யாரும் அதனை வெளியிடவில்லை.

இதையும் படியுங்கள்... ‘பொன்னியின் செல்வன் 2’ நடிகர் - நடிகைகளின் சம்பள விவரம் இதோ!