ஆயுஷ் அமைச்சகம், ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் (CCRAS), ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி இதழின் (JRAS) அதிகாரப்பூர்வ ஆராய்ச்சி வெளியீட்டின் சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி ஆயுஷ் குறித்து "மன் கி பாத்" எபிசோட்களில் சுமார் 37ல் குறிப்பிடப்பட்டுள்ளார். குடிமக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கவும், யோகா பயிற்சி செய்யவும், ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஆயுர்வேதத்தை பின்பற்றவும், ஆயுர்வேத வாழ்க்கை முறையை தங்கள் வாழ்க்கைமுறையில் உள்வாங்கவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஆயுஷ் துறையை மேம்படுத்துவதற்கான பிரதமரின் முயற்சிகளின் விளைவாக, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

ஆயுஷ் துறையில் “மன் கி பாத்” ஏற்படுத்திய தாக்கத்தையும், நாட்டின் தேசிய சுகாதாரக் கொள்கை மற்றும் சுகாதாரத் தலையீடுகளின் அடிப்படைத் தூணாக ஆயுஷ் எவ்வாறு மாறுகிறது என்பதையும் இந்த இதழ் எடுத்துக்காட்டுகிறது. கொள்கை & பொது சுகாதாரம், அறிவியல் & சான்றுகள், சுகாதாரக் கல்வி & விழிப்புணர்வு, யோகா & ஸ்வஸ்தவ்ரித்தா (வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, உணவு, ஊட்டச்சத்து), கொரோனாவுக்கு எதிரான போர், தொழில் மற்றும் கல்வித்துறை ஒத்துழைப்பு ஆகிய 7 சாத்தியமான பகுதிகளில் புகழ்பெற்ற நிபுணர்களின் மொத்தம் 24 கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க..2050ல் பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும்.. அப்போ காவேரி ஆறு என்னவாகும்? அதிர்ச்சி தகவல்