Asianet News TamilAsianet News Tamil

போர் காரணமாக பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்.. இந்திய கார்கள், உணவுப் பொருட்களை குறிவைக்கும் ரஷ்யா..

போர் காரணமாக ரஷ்யாவில் பொருட்களின் விநியோகம் குறைந்துள்ளதால், இந்தியா சில பொருட்களை வழங்க வேண்டும் என்று ரஷ்யா கோருகிறது.

Due to the war, there is a problem in getting goods..Indian cars, Russia targeting food products..
Author
First Published Apr 28, 2023, 6:54 AM IST

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதுவரை இரு நாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக 2-ம் உலக போருக்கு பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் நெருக்கடியாக இந்த போர் பார்க்கப்படுகிறது. இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.13 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். எனினும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில், இந்த போர் காரணமாக, ரஷ்யாவில் பொருட்களின் விநியோகம் குறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யா இந்தியா சில பொருட்களை வழங்க வேண்டும் என்று கோருகிறது. கார்கள் மற்றும் பிற ஆட்டோமொபைல் பொருட்கள் மற்றும் உணவுக்கு தேவையான விவசாய பொருட்களை இந்தியாவிடம் இருந்து ரஷ்யா கோரியுள்ளது. அதே சமயம் இந்திய மதிப்பில் வர்த்தக செய்து செலவைக் குறைக்க ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : செம்மலை மேல்முறையீடு.. என் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது.. சசிகலா கேவியட் மனு.!

உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார மற்றும் நிதி தடைகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்தன.  இதன் காரணமாக பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாகன உதிரிபாகங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக பல கார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை மூடுகின்றன. எனவே இந்தியாவில் இருந்து கார்கள் மற்றும் உணவு போன்ற பொருட்களை வழங்க ரஷ்யா கோருகிறது,

இந்த சூழலில் இந்திய வாகன உதிரிபாகங்கள் மற்றும் கார் நிறுவனங்கள் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதே நேரத்தில் ஆட்டோ பாகங்கள் ஏற்றுமதி சாத்தியம் என்பதால், இந்தியாவில் இருந்து அவை ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஆட்டோமொபைல் துறையின் பல நிறுவனங்கள் வாகனங்களை வழங்க ஒப்புக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. Tata Motors மற்றும் Mahindra & Mahindra போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் கூட சர்வதேச அளவில் இணையலாம், இதில் மார்கியூ ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்டுகள் அடங்கும்.

ரஷ்யாவில் இருக்கும் ஏற்றுமதியாளர்கள் குழு, சோயா மற்றும் பல விவசாய பொருட்களை வழங்குவது குறித்து விவாதித்துள்ளது. ஏனெனில் ரஷ்யா விநியோகத்தை அதிகரிக்க விரும்புகிறது. ஒரு ஏற்றுமதியாளர், சூப்பர்மார்க்கெட் அலமாரிகள் காலியாகி வருவதாகவும், எனினும் பொருட்களை நிரப்புவதற்கு இன்னும் ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

மேலும் இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தகத்திற்கு ரூபாய் - ரூபிள் வர்த்தகம் பெரிதும் உதவும் என்றி ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.. தற்போது ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் சுமார் 4 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ரிசர்வ் வங்கியால் விகிதங்கள் அறிவிக்கப்படலாம் என்று ஏற்றுமதியாளர்கள் வர்த்தகத் துறைக்கு பரிந்துரைத்துள்ளனர். எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : Karnataka Elections : 6 நாட்களில் 22 பேரணிகள்.. நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி..

Follow Us:
Download App:
  • android
  • ios