என்டிஆர் நூற்றாண்டு விழா: சூப்பர்ஸ்டார் ரஜினியை வரவேற்ற பாலகிருஷ்ணா..வைரல் வீடியோ!!

என்டிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த சூப்பர்ஸ்டார் ரஜினியை விமான நிலையத்தில் வரவேற்றார் நடிகர் பாலகிருஷ்ணா.

superstar rajinikanth attend ntr centenary birth anniversary celebrations

என்.டி.ஆர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமான நந்தமுரி தாரக ராமராவின் 100வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் பிரமாண்டமான நிகழ்வு விஜயவாடாவில் இன்று (ஏப்ரல் 28ஆம் தேதி) நடைபெறவுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என்பது உறுதியாகியுள்ளது. 

இதை என்டிஆர் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணாவும் ஒரு வீடியோவில் உறுதி செய்துள்ளார். மேலும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் இந்த விழாவில் கலந்து கொள்வார் என பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், ரசிகர்களை கொண்டாட்டத்தில் பங்கேற்க வருமாறு பாலகிருஷ்ணா அழைப்பு விடுத்துள்ளார்.

superstar rajinikanth attend ntr centenary birth anniversary celebrations

அவர் இதுபற்றி பேசியபோது, “என்டிஆர் நூற்றாண்டு விழா ஏப்ரல் 28ம் தேதி (இன்று) ஜனார்த்தன் தலைமையில் நடைபெற்று, விழாவாக கொண்டாடப்படும். என்னுடன் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். நீங்கள் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? விடை கொடுத்தாரா மணிரத்னம்? - பொன்னியின் செல்வன் 2 விமர்சனம் இதோ

இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வை பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.மூன்று முறை ஏழாண்டுகள் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிய என்டிஆர், தெலுங்கு பேசும் மாநிலங்களில் இன்று வரை மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பல மாநில மற்றும் தேசிய விருதுகளை வென்றுள்ளார். ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம் (1962), கர்ணன் (தமிழ், 1964) மற்றும் தான வீர சூர கர்ணன் (1977) உட்பட 17 க்கும் மேற்பட்ட படங்களில் கிருஷ்ணராக நடித்ததற்காக இன்று வரை கொண்டாடப்படுகிறார் என்பது முக்கியமான விஷயமாகும். இந்த நிலையில் என்டிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த சூப்பர்ஸ்டார் ரஜினியை விமான நிலையத்தில் வரவேற்றார் நடிகர் பாலகிருஷ்ணா. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை.. முழு விபரம்.!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios