சுமார் 17 ஆண்டுகால லண்டன் வாசத்திற்குப் பிறகு, வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவர் தாரிக் ரஹ்மான் நாடு திரும்பியுள்ளார். இவரது வருகை 2026 தேர்தலுக்கான அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 25 December 2025: 17 ஆண்டுக்குப் பின் நாடுதிரும்பிய தாரிக் ரஹ்மான்! வங்கதேச அரசியலில் பரபரப்பு!
Tamil News Live today 25 December 2025: 17 ஆண்டுக்குப் பின் நாடுதிரும்பிய தாரிக் ரஹ்மான்! வங்கதேச அரசியலில் பரபரப்பு!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live today17 ஆண்டுக்குப் பின் நாடுதிரும்பிய தாரிக் ரஹ்மான்! வங்கதேச அரசியலில் பரபரப்பு!
Tamil News Live todayகாசா மக்களை மறக்க முடியுமா? முதல் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் போப் லியோ உருக்கம்!
புதிய போப் ஆண்டவர் லியோ தனது முதல் கிறிஸ்துமஸ் உரையில், காசா மக்களின் துயரங்கள் மற்றும் அகதிகளின் நிலை குறித்து உருக்கமாகப் பேசினார். போர்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றும், மனிதநேயமே கடவுள் வசிக்கும் இடம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Tamil News Live todayஅதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகிவிட்டது. இதற்காக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அறிவித்துள்ளார். இந்தக் குழு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் அறிக்கையை உருவாக்கும்.
Tamil News Live todayவி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக, தனது மேயர் வேட்பாளராக வி.வி. ராஜேஷையும், துணை மேயர் வேட்பாளராக ஆஷாநாத் ஜி.எஸ்.ஸையும் அறிவித்துள்ளது. தேர்தலில் பாஜக 50 இடங்களை வென்று வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
Tamil News Live todayரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
விஜய் ஹசாரே டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கி, முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளனர். இந்த இருவரின் அடுத்த போட்டி எப்போது என்று பார்ப்போம்.
Tamil News Live todayகொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
ஓபிஎஸ், டிடிவி.தினகரன் தரப்பில் கடும் அதிருப்தியும் கோபமும் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில், ஈபிஎஸ் தலைமையை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக முடிவெடுக்கப்பட்டு, கூட்டணி விவகாரத்தை மேலும் சில வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.
Tamil News Live todayதிமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!
பேருந்துகளின் பராமரிப்பு, ஓட்டுநர் பணிநேரம், பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவற்றில், திமுக அரசு காட்டும் அலட்சியத்தின் விளைவே இந்த தொடர் விபத்துகள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Tamil News Live today7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!
கர்நாடகாவின் ஹலகா கிராம மக்கள், தினமும் இரவு 7 முதல் 9 மணி வரை 'டிஜிட்டல் விரதம்' மேற்கொள்கின்றனர். சைரன் ஒலித்தவுடன், கிராம மக்கள் டிவி, மொபைல்களை அணைத்துவிட்டு, படிப்பதிலும் உரையாடுவதிலும் நேரத்தைச் செலவிடுகின்றனர்.
Tamil News Live todayஎங்களுக்கு 6 சீட்டா? அப்படி சொன்ன கட்சிக்கு அழிவுக்காலம் ஆரம்பிச்சுருச்சு.. பிரேமலதா ஆவேசம்!
அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தவறான தகவலைப் பரப்பிய கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayடி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!
சஞ்சு சாம்சன் பிரதான விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரராக இருந்தாலும், டி20 உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராகக் களமிறங்குவதே சிறந்தது என்று கிஷனின் சிறுவயது பயிற்சியாளர் உத்தம் மஜூம்தார் கூறியுள்ளார்.
Tamil News Live todayவங்கதேச தேசத்தின் அடுத்த பிரமராகும் ‘இருண்ட இளவரசர்’..? யார் இந்த ‘டேஞ்சரஸ்’ தாரிக் ரஹ்மான்..?
வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தாரிக் பிரதமராக வருவது உறுதி என்று கருதப்படுகிறது. இது நடந்தால், அவரது தந்தை, தாய்க்குப் பிறகு அவரது குடும்பத்தில் மூன்றாவது அரச தலைவராக இருப்பார் தாரிக்.
Tamil News Live todayஇணையத்தை கலக்கும் '67'.. டைப் செய்தாலே ஆட்டம் காணும் மொபைல்! வைரலாகும் கூகுள் ட்ரிக்!
Google Search கூகுளில் '67' எனத் தேடினால் உங்கள் ஸ்கிரீன் ஆடும்! இந்த புதிய மேஜிக் ட்ரிக் மற்றும் 'பேரல் ரோல்' பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
Tamil News Live todayயூத சின்னம் இருந்த காருக்கு தீ வைப்பு! ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வெறுப்பு அரசியல்!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில், 'ஹனுக்கா' வாழ்த்துப் பலகை பொருத்தப்பட்டிருந்த கார் ஒன்று மர்மமான முறையில் தீவைத்து எரிக்கப்பட்டது. இது ஆஸ்திரேலிய யூதர்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil News Live todayவேற லெவல் எடிட்டிங்.. சாண்டா கிளாஸ் உங்க வீட்டுக்கே வருவாரு! இணையத்தை கலக்கும் எலான் மஸ்க்!
Christmas கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு க்ரோக் ஏஐ (Grok AI) மூலம் சாண்டாவுடன் புகைப்படம் எடுக்கும் புதிய வசதியை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.
Tamil News Live todayஆப்பிள் தலையில் இடி! கிடுகிடுவென உயரும் விலை.. ஐபோன் 17 ப்ரோ கனவாகி போகுமா?
iPhone 17 Pro 2026ல் ஐபோன் 17 ப்ரோ விலை கடுமையாக உயர வாய்ப்பு! மெமரி சிப் தட்டுப்பாடு காரணமாக தள்ளுபடி கிடைப்பது கடினம். முழு விபரம் உள்ளே.
Tamil News Live todayபுது போன் வாங்க பிளானா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ரெட் மேஜிக் 11 ஏர் சும்மா அதிரவிடுது!
Red Magic 11 Air ரெட் மேஜிக் 11 ஏர் வெளியீடு உறுதி! ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், 7000mAh பேட்டரி மற்றும் 24GB ரேம் உடன் வரும் புதிய போன். முழு விபரங்கள் இதோ.
Tamil News Live todayவாட்ஸ்அப் யூசர்களே உஷார்! இனி 'பேன்' ஆனா கதை முடிஞ்சுது.. மத்திய அரசு அதிரடி!
WhatsApp வாட்ஸ்அப்பில் முடக்கப்பட்ட எண்கள் இனி மற்ற செயலிகளிலும் இயங்காது! சைபர் மோசடியைத் தடுக்க மத்திய அரசு புதிய அதிரடி திட்டம்.
Tamil News Live todayமொபைல் டூ கார் வரை.. ஜெமினி என்ட்ரி எப்போ? கூகுள் வெளியிட்ட புதிய Roadmap விபரங்கள்!
Gemini கூகுள் அசிஸ்டண்ட்டை மாற்றும் திட்டத்தை 2026-க்கு ஒத்திவைத்தது கூகுள். ஜெமினி 3 ஃபிளாஷ் மற்றும் புதிய அப்டேட் விபரங்கள் இதோ.
Tamil News Live todayசைக்கிள், பைக்கில் இடியாப்பம் விற்கிறீங்களா? உணவுப் பாதுகாப்புத் துறை போட்ட அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இனி கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தரம் குறைந்த இடியாப்பம் விற்பனை குறித்த புகார்களை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tamil News Live todayரீல்ஸ் வீடியோ உண்மையா? பொய்யா? மண்டைய பிக்காதீங்க.. கூகுள் ஜெமினி கிட்ட கேளுங்க!
Google Gemini கூகுள் ஜெமினி மூலம் AI படங்களை எப்படிக் கண்டுபிடிப்பது? SynthID தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது? முழுமையான வழிகாட்டுதல் இதோ.