- Home
- Sports
- Sports Cricket
- டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!
சஞ்சு சாம்சன் பிரதான விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரராக இருந்தாலும், டி20 உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராகக் களமிறங்குவதே சிறந்தது என்று கிஷனின் சிறுவயது பயிற்சியாளர் உத்தம் மஜூம்தார் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில்லை நீக்கிய தேர்வாளர்கள், சஞ்சு சாம்சனை தொடக்க வீரராகவும், பிரதான விக்கெட் கீப்பராகவும் சேர்த்தனர். உள்நாட்டு கிரிக்கெட்டில் ஜொலித்த இஷான் கிஷன், பேக்-அப் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டார். முஷ்டாக் அலி டிராபியில் அவரது சிறப்பான ஆட்டமே, ஜிதேஷ் சர்மாவை பின்னுக்குத் தள்ளி இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்கக் காரணம்.
இஷான் கிஷன் தான் ஒப்பனிங்
சஞ்சு சாம்சன் பிரதான விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரராக இருந்தாலும், டி20 உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராகக் களமிறங்குவதே சிறந்தது என்று கிஷனின் சிறுவயது பயிற்சியாளர் உத்தம் மஜூம்தார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டெலிகாம் ஏசியா ஸ்போர்ட்ஸிடம் பேசிய அவர், ''ஆடும் லெவனை அணி நிர்வாகம்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனாலும், பவர் பிளேயில் அபிஷேக்குடன் இஷான் கிஷன் இருப்பது அதிக பலனளிக்கும் என நான் நினைக்கிறேன்.
நியூசிலாந்து தொடரில் சஞ்சுக்கு வாய்ப்பு
மிடில் ஓவர்களில் இஷன் கிஷனால் பேட்டிங் செய்ய முடியும் என்றாலும், ஐபிஎல் மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஒரு தொடக்க வீரராக அவர் எவ்வளவு அபாயகரமானவர் என்பதை நிரூபித்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கு முன் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சனே தொடக்க வீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சஞ்சுக்கு நியூசிலாந்து தொடர் தான் முக்கியம்
ஆனால், சஞ்சு சாம்சன் சரியாக விளையாடவில்லை என்றால் முஷ்டாக் அலி டிராபிக்குப் பிறகு விஜய் ஹசாரே டிராபியில் கர்நாடகாவுக்கு எதிராக ஆறாவது வீரராகக் களமிறங்கி 33 பந்துகளில் சதம் அடித்த இஷான் கிஷனையும் தொடக்க வீரர் இடத்திற்குப் பரிசீலிக்க வாய்ப்புள்ளது.
இந்தச் சூழலில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் சஞ்சு சாம்சனுக்கு மிகவும் முக்கியமானது. கிஷன் அபிஷேக்குடன் தொடக்க வீரராகக் களமிறங்கினால், தொடக்கத்தில் இடது கை - வலது கை காம்பினேஷனை உறுதி செய்ய முடியாது என்பதும் ஒரு குறைபாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

