- Home
- Politics
- கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
ஓபிஎஸ், டிடிவி.தினகரன் தரப்பில் கடும் அதிருப்தியும் கோபமும் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில், ஈபிஎஸ் தலைமையை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக முடிவெடுக்கப்பட்டு, கூட்டணி விவகாரத்தை மேலும் சில வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தன் கையில் வைத்திருந்த தொகுதி பங்கீடு லிஸ்டை வெளியிட, இது தேமுதிக பொதுச்செயலாளர், டிடிவி.தினகரன், ஓபிஎஸை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
பாஜக-அதிமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சந்திப்புக்கு பிறகு அதிமுக கூட்டணி தொடர்பான தகவல்களை குறிப்பாக, அதிமுகவின் வியூக வகுப்பாளர்கள் தயாரித்த தொகுதி பங்கீடு லிஸ்டில் ஓபிஎஸ், டிடிவி.தினகரன், பிரேமலதா, உள்ளிட்டோருக்கு சில தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின. அதிமுக வியூக வகுப்பாளர்கள் வெளியிட்ட தகவலின்படி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ஏறக்குறைய இப்படி இருக்கும் என்று கூறி அதிமுக- 170 தொகுதிகள், பாஜக- 23 தொகுதிகள், பாமக- 23 தொகுதிகள், தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்- 6 தொகுதிகள், அமமுக டிடிவி.தினகரன்- 6 தொகுதிகள், ஓபிஎஸ் அணி - 3 தொகுதிகள், தமாகா -3 தொகுதிகள் என பட்டியலை வெளியிட்டனர்.
ஓபிஎஸ், டிடிவி. தினகரனுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது, எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க வேண்டும், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ், டிடிவி.தினகரன் தரப்பில் கடும் அதிருப்தியும் கோபமும் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில், ஈபிஎஸ் தலைமையை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக முடிவெடுக்கப்பட்டு, கூட்டணி விவகாரத்தை மேலும் சில வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர். பல ஆதரவாளர்கள் தவெகவுடன் இணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில்தான், ‘கூட்டணி குறித்து ஜனவரியில்தான் முடிவெடுப்போம். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 சீட் என்பது வெறும் வதந்தி. யாரும் இதனை நம்பவேண்டாம். வெறும் 6 இடங்கள் எனத் தகவல் வெளியிட்ட கட்சிக்கு அழிவுகாலம் ஆரம்பமாகி விட்டது’ என கொந்தளித்தார் பிரேமலதா விஜயகாந்த்.
அதே போல, டிடிவி.தினகரனும், ‘‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராகவே ஏற்றுக்கொள்ளாத நாங்கள் எப்படி அதிமுகவுடன் கூட்டணி வைப்போம்’’ என்றார் அதிரடியாக.
பாஜகவிற்கு பாடம் புகட்டுவதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொகுதி பங்கீட்டை வெளியிட்டு, கடைசியில் அவர்களுக்கே எதிராகப் போய் முடிந்திருக்கிறது.தவிர பாமக தரப்பில் ராமதாஸிடம் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே பேசிவிட்டாராம். ‘என்னிடம்தான் ஒரிஜினல் பாமக இருக்கிறது’ என்கிறார் டாக்டர் ராமதாஸ். அந்த பாமகவும் திமுக பக்கம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
நல்லா வியூகம் வகுக்குறாங்கப்பா..?
