Asianet News TamilAsianet News Tamil

4 ஏ.டி.எம்-களில் பணம் கொள்ளை... தடுப்பதற்கான வழிகள் என்ன? வங்கி அதிகாரிகளுக்கு சைலேந்திர பாபு அறிவுறுத்தல்!!

தி.மலையில் நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளை நடந்த நிலையில் அதனை தடுப்பதற்கான வழிகள் குறித்து வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். 

Sylendra Babu instructs bank officials about ways to prevent money theft from atm
Author
First Published Feb 14, 2023, 12:07 AM IST

தி.மலையில் நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளை நடந்த நிலையில் அதனை தடுப்பதற்கான வழிகள் குறித்து வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். திருவண்ணாமலையில் நான்கு வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அளித்த தகவலின் படி, மணலூர் பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை ஏடிஎம், தேனிமலை பகுதியில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை ஏடிஎம், போளூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள எஸ்பிஐ வங்கி கிளை ஏடிஎம் மற்றும் கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள ஒன் இந்தியா ஏடிஎம் ஆகிய நான்கு ஏடிஎம் மையங்களில் இந்த கொள்ளை நடந்துள்ளது.

இதையும் படிங்க: ஹஜ் பயணம் செல்ல விரும்புகிறீர்களா.? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு - முழு விபரம் உள்ளே !!

4 ஏடிஎம் மையங்களில் இருந்து 70 லட்சம் ரூபாய் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி கொள்ளை முயற்சி நடத்தியதால் 4 ஏடிஎம் இயந்திரங்களும் எரிந்து சேதம் அடைந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப் படைகளும், இதில் வெளி நபர்களுக்குத் தொடர்பு இருப்பதால் மேற்கொண்டு 3 தனிப்படைகளும் என மொத்தம் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஏடிஎம்களில் பணம் கொள்ளை போனது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தினார்.

இதையும் படிங்க: வெளியானது சிறந்த மருத்துவமனைக்கான தரவரிசைப் பட்டியல்... முதலிடத்தில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை!!

51 பொது மேலாளர்கள் மற்றும் பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகளுடனான இந்த ஆலோசனையின் போது, வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் உள்ள பணத்தை கண்காணிக்க மறைமுக கேமராக்களை பொருத்த வேண்டும், முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் கொண்ட கேமராக்களை ஏடிஎம்களில் பொருத்த வேண்டும், எடிஎம்களை உடைத்தால் எச்சரிக்கை மணி ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும், அருகில் உள்ள காவல் நிலையங்களிலும் எச்சரிக்கை மணி ஒலிக்குமாறு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேள்கொள்ள வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். மேலும் இதனை செய்வதால் திருட்டு நடவடிக்கைகள் தடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios