சிம்பு முதல் SK வரை.. வாழ்த்து மழையில் நனைந்த துணை முதல்வர் - ஆனா "தலைவர்" ஒன்னும் சொல்லலையே!
Udhayanidhi Stalin : இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் நல்ல பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தான் உதயநிதி ஸ்டாலின். ஆனால் அதற்கு முன்பாகவே திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து பல பணிகளை அவர் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பணியாற்றி வந்த அவர், தற்பொழுது நடந்த அமைச்சரவை மாற்றத்தில் தமிழகத்தின் புதிய துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் "தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றும் வாய்ப்பைத் தந்த கழக தலைவர் மாண்புகள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். நம் முதலமைச்சரவர்களின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்" என்று கூறுகிறார். பல்வேறு அரசியல் தலைவர்களும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டாப் 4 கோலிவுட் இயக்குனர்கள்.. 2ம் படத்திலேயே ஓஹோவென ஏற்றிவிட்ட கார்த்தி - மாஸ் ப்ரோ!
இந்த நிலையில் பல முன்னணி நடிகர்களும், இயக்குனர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவில் "உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். துணை முதலமைச்சராக நீங்கள் அற்புதமாக செயல்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து திரைப்படங்களில் நடித்து அசத்திய நடிகர் சந்தானம் வெளியிட்ட பதிவில் "முதலாளி உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று கூறியிருக்கிறார். இதற்கு "சந்தானம் சார் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" என்று பதில் கொடுத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
பிரபல நடிகர் அருண் விஜய், நடிகர் சதீஷ், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்குனர் அருண் ராஜா காமராஜ், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகர் ஜெயம் ரவி, நடிகர் தனுஷ், நடிகர் சிலம்பரசன், காங்கிரஸ் கட்சி தலைவரும் நடிகருமான விஜய் வசந்த் என்று பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் பிரபல நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில் உதயநிதியை வாழ்த்தியுள்ளார்.
"இன்று தமிழகத்தில் துணை முதல்வராக உறுதிமொழி ஏற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தமிழகத்தை நிச்சயம் நல்ல பாதையில் அழைத்துச் செல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று கூறியிருக்கிறார். இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் "உங்களுடைய வாழ்த்துக்கள் என்னை கௌரவம் அடையச் செய்திருக்கிறது. நிச்சயம் தமிழக மக்களுக்கு அனைத்து விதமான நன்மைகளையும் செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்" என்று பதில் அளித்து இருக்கிறார்.
இப்படி கோலிவுட்டில் உள்ள பிரபலங்கள் அனைவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் எந்தவிதமான வாழ்த்துக்களையும் உதயநிதிக்கு தெரிவிக்கவில்லை என்று ஒரு சாரார் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதேபோல தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும், இன்னும் உதயநிதி ஸ்டாலினுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உதயநிதிக்கு இத்தனை கோடி கடன் இருக்கா.? வெளியான சொத்து பட்டியல்